Saturday, December 2, 2023

பயணிகள் அதிர்ச்சி! நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் புகுந்த பாம்பு

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாம்பு புகுந்ததால், பயணியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது முற்றிலும் உண்மை. ஒரு சிலர் தான் பாம்பை கண்டால் பயப்படமாட்டார்களே தவிர, பெரும்பாலானோர் அச்சத்தில் நடுங்குவர். அதுவும் அந்த பாம்பு ரயிலில் புகுந்து விட்டால்?

அப்படி ஒரு சம்பவம் தான் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு இரவு 7:50 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் ரயில் நிலையம், ஏழாவது நடைமேடையில் புறப்பட தயாராக இருந்தது.

‘எஸ் 1’ பெட்டியில், இருக்கை எண் 44 அருகே பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த பயணியர், அலறியடித்து பெட்டியை விட்டு கீழே இறங்கினர்.உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

ஊழியர்கள் அந்த பெட்டியில் ஏறி, சோதனையிட்ட போது, 3 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு இருப்பது தெரியவந்தது. அதை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles