தமிழ் சினிமாவில் இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விவேக் . இதில் விவேக் மற்றும் தனுஷ் இருவரின் காம்போ ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட வெற்றிகரமான காம்போ . இருவரும் வேலையில்லா பட்டதாரி, உத்தம புத்திரன், படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கின்றனர்.
அசால்ட் ஆறுமுகம், எமோஷ்னல் ஏகாம்பரம் என தனுஷ் படங்களில் விவேக் காமெடியில் தாறுமாறு கவுண்டர்களை கொடுத்து மிரட்டி இருப்பார். இந்நிலையில் விவேக் கடந்த வருடம் மாரடைப்பால் இறந்துவிட்ட நிலையில் இந்த காம்போவை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்து வருகின்றனர்.
நடிகர் விவேக் உயிரோடு இருந்தபோது பேட்டியில் சொன்ன ஆசையை தற்போது தனுஷ் நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
உத்தமபுத்திரன் படம் இயக்கிய மித்ரன் ஜவகருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து தனுஷ் மீண்டும் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என விவேக் கூறி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படம் மூலமாக தனுஷ் அதை செய்திருக்கிறார். விவேக்கின் பழைய பேட்டி தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
Vivek would have been the happiest one, on seeing the movie's reception❤@MithranRJawahar @dhanushkraja #Thiruchitrambalam pic.twitter.com/2CclMiAGIe
— Sabari (@sab_Offl) August 20, 2022