Friday, February 20, 2026

கமல்ஹாசன் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளால் மன்னிப்பு கோரினார் குரேஷி மற்றும் புகழ்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மாயா கிருஷ்ணன் குறித்தும், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் குறித்தும் சர்ச்சையான கருத்துகளை பேசியதற்காக விஜய் டிவி பிரபலங்கள் குரேஷி மற்றும் புகழ் ஆகியோர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் பங்கேற்ற 23 போட்டியாளர்களில் மாயா கிருஷ்ணனும் ஒருவர். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அதனடிப்படையில் அவர் பிக் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ADVERTISEMENT

பிக் நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பல நாட்கள் மாயாவை சுற்றி பல சர்ச்சைகள் வெடித்தன. வார இறுதி நாட்களில் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் கமல், மாயாவை கண்டும் காணாமல் விடுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. மேலும் மாயா சீசன் முழுவதும் பிக் நிகழ்ச்சியில் இருக்க கமலும் ஒரு காரணம் என்றெல்லாம் கருத்துகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.

இப்படியான நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி இருவரும் மேடை நிகழ்ச்சி ஒன்றில் மாயா மற்றும் கமல்ஹாசன் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறினர். துபாயில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் புகழ் கேட்கும் கேள்விகளுக்கு குரேஷி கமல் குரலில் பதிலளித்திருப்பார். அதில், ‘சென்னையில் பிடிச்ச இடம்? மாயாஜால், புடிச்ச படம்? மாயா பஜார், தமிழ்நாட்டில் புடிச்ச இடம்? மாயா வரம் என மாயாவை வைத்து கமல் பதில் சொல்வது போல குரேஷி தெரிவித்திருப்பார். இந்த வீடியோ இணையத்தில் கடும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வீடியோவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டு குரேஷி மற்றும் புகழ் இருவரும் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், “நானும், குரேஷியும் துபாயில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கிரிப்டில் இருந்த கருத்துகள் கமல் ரசிகர்களை காயப்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் அதுபோல் செய்யமாட்டோம். நாங்கள் செய்தது பெரிய தவறுதான். இதற்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளனர்.

மேலும், “கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர். அவரது படங்களை நாங்கள் அனைவரும் விரும்பி பார்க்கிறோம். அவரது பெயரில் நாங்கள் எந்த ஒரு சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. அப்படி எதையும் செய்திருந்தால் அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.

குரேஷி மற்றும் புகழ் ஆகியோர் வெளியிட்டுள்ள மன்னிப்புக்கான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT