Tuesday, February 24, 2026

ரயில் டிக்கெட் கட்டணம் குறைப்பு: மகிழ்ச்சியான செய்தி!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து, பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 30 ரூபாயாக இருந்தது. இது தினசரி ரயில் பயணிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரும் சுமையாக அமைந்திருந்தது.

கொரோனா பாதிப்பு குறைந்து இயல்புநிலை திரும்பிய பிறகும் கூட, இந்த உயர் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதனை குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், பயணிகள் ரயில்களில் 20 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இனி பயணிகள் ரயில்களில் கொரோனா காலத்துக்கு முன்பிருந்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இந்த முறை உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரயில் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT