Tuesday, February 24, 2026

லட்சுமி மேனனின் முதல் காதல் யாருடன் தெரியுமா ? அவரே கூறிய உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லட்சுமி மேனன் தனது முதல் காதல் குறித்து அண்மையில் நேர்க்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

“என்னிடம் யாரும் காதலை கூறவில்லை. ஆனால், நான் எனது காதலை வெளிப்படுத்தியுள்ளேன். பள்ளியில் படிக்கும்போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது. அவரிடம் நேராக சென்று என்னுடைய லவ்வை சொன்னேன். அவர் சில நாட்கள் கழித்து என்னுடைய காதலை ஒப்புக் கொண்டார்.

ADVERTISEMENT

அதற்கு அப்புறம் நாங்கள் அடிக்கடி பேசத் தொடங்கினோம். தொலைபேசியில் தொடர்ந்து பேசினோம். போர்வைக்குள் இருந்துகொண்டு என் வீட்டாருக்கு தெரியக்கூடாது என்பதற்காக அவரிடம் பேசியுள்ளேன். வெளியே அதிகமாக பேசிக் கொள்ள மாட்டோம். நாங்கள் நண்பர்களாக தான் இருந்தோம். பள்ளிக்கூடம் முடிந்த பிறகு எங்கள் காதல் என்ன ஆனது என்பது தெரியாமல் போய் விட்டது. நாங்கள் இருவரும் படிப்பை பற்றி தான் யோசித்தோம். அதன் பிறகு இருவருமே பேசவில்லை. அண்மையில் அந்த நபருக்கு திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன்” என்று லட்சுமி மேனன் தெரிவித்தார்.

லட்சுமி மேனனின் முதல் காதலனைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், அவர் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலில் விழுந்ததாகத் தெரிகிறது. ஆனால், படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், அந்தக் காதல் வெற்றிபெறவில்லை.

லட்சுமி மேனன் தனது முதல் காதல் குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT