Tuesday, February 24, 2026

ப்பா போடு தகிட 1000 பட்ஜெட்டில் பட்டிதொட்டி எல்லாம் பதறவிட்ட விடாமுயற்சி ஓப்பனிங் பாடல் !.. தியேட்டர் கிழிய​ போகுது உறுதி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

1000 அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் மூலம் மகிழ் திருமேனி இயக்கும் இந்த ப்ராஜெக்ட் ஒரு ரேஸி என்டர்டெய்னர் ஆகும். படத்தின் பெரும்பகுதி அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது மற்றும் படக்குழு சமீபத்தில் படப்பிடிப்பை முடித்தது.இன்னும் இரண்டு அட்டவணைகள் மீதமுள்ளன. மார்ச் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். வட இந்தியா மற்றும் ஜார்ஜியாவில் கிட்டத்தட்ட 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும், புனேவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்து வரும் அந்த படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி முடிக்கத் திட்டமிட்டார் மகிழ்திருமேனி. ஆனால் அவர் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை.படப்பிடிப்பை துவங்கிய பிறகு நடந்த விஷயங்களால் திட்டமிட்டபடி செயல்பட முடியாமல் போய்விட்டது. படக்குழு மீண்டும் அஜர்பைஜான் செல்கிறது என்றார்கள். இந்நிலையில் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.விடாமுயற்சி படத்திற்கு என்ன தான் ஆனது, அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது வெளியிடலாம் அல்லவா என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சமூக வலைதளத்திலேயே இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

ADVERTISEMENT

இதற்கிடையே எதிர்பார்க்காத ஒரு அப்டேட் கசிந்திருக்கிறது. அதாவது விடாமுயற்சி படத்தில் கார் ஸ்டண்ட் காட்சியில் டூப் போடாமல் நடித்திருக்கிறாராம் அஜித். ஸ்டண்ட் காட்சியில் டூப் போட்டுக்கலாம் சார் என இயக்குநர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார் அஜித். இது அனைவருக்கும் தெரிந்தது தான். அதனால் விடாமுயற்சிக்காக அவர் ரிஸ்க் எடுத்ததில் ஆச்சரியம் இல்லை.உடம்பில் அத்தனை காயம் ஏற்பட்டபோதிலும் பைக் ஸ்டண்ட் காட்சிகளிலிலேயே நடிக்கும் அஜித் குமார், கார் ஸ்டண்ட் காட்சியில் நடிக்க மாட்டாரா?. சொல் பேச்சே கேட்க மாட்டீங்களா தல?. இந்த ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரசிகர்களின் பேச்சை கேட்க அவர் தயாராக இல்லை.லைகா நிறுவனம் தான் தயாரித்து வரும் பிற படங்கள் குறித்து தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகிறது. அப்படி அப்டேட் வரும்போது எல்லாம், விடாமுயற்சினு ஒரு படத்தை தயாரிப்பது நினைவிருக்கிறதா என அஜித் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.தயவு செய்து இனி லைகா தயாரிப்பில் நடிக்க வேண்டாம் தல என அஜித் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் அஜித் குமாரின் அடுத்த படம் உறுதியாகிவிட்டது. ஏ.கே. 63 எனும் அந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கு படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஏ.கே. 63 படத்திற்காக சென்னையில் அலுவலகம் திறந்திருக்கிறது.

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, மேபு ஜார்ஜ் பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, முறையே ஓம் பிரகாஷ் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2024 மே மாதம் திரைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT