Tuesday, February 27, 2024

அட்ரா சக்க இது ஹாலிவுட் லெவல்! விடாமுயற்சி படத்துக்காக 20 கிலோ உடல் எடை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய அஜித்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...

கேட்டாலே மிரளுது 🔥 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஜித்63 படத்தை பற்றிய 🔥 அப்டேட் !

அஜீத் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் வெளியாகி ஒரு...

சமுத்திரக்கனி’ஸ் யாவரும் வல்லவரே படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம்...
ADVERTISEMENT

அஜித்குமார் தனது புதிய படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் அஜர்பைஜானில் தொடங்கினார். ஒரு அட்டவணை முடிந்து சமீபத்தில் சென்னை திரும்பினார். இப்போது, டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் அடுத்த ஷெட்யூலுக்காக ஏகே மற்றும் படக் குழு மீண்டும் அஜர்பைஜானுக்குச் செல்வதாகக் கேள்விப்படுகிறோம்.

70 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படம் ஒரு ரோட்-ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் குமார் ஸ்டைலான சேஸிங் சீக்வென்ஸில் நடிப்பதாக கூறப்படுகிறது. முழுப் படப்பிடிப்பையும் 2024 ஜனவரி இறுதிக்குள் முடித்து, தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மீசை, தாடி எல்லாம் குறைத்த அஜித்தின் லேட்டஸ்ட் லுக் இப்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவுகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் மருத்துவரான ரசிகையுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் அஜித் எங்கு சென்றாலும் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டார்.

அந்த வகையில் இப்போது மருத்துவரிடம் சேர்ந்து புகைப்படம் எடுத்திருப்பது இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. மேலும் மிக்ஜாம் புயலில் கோரத்தாண்டவத்தால் தற்போது சென்னை மக்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதில் குழந்தைகளுக்கான பால், வயதானவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.

பல கடைகள் மழை வெள்ளத்தால் மூடப்பட்டு விட்டன. இந்த சூழலில் காரம்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் அமீர்கான் ஆகியோர் தமிழக தீயணைப்புத் துறையினால் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த தகவலை அறிந்த அஜித் அங்கு சென்று அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் குடும்பத்தினர் கமிட்டி ஹால் செல்ல உதவியதாகவும் தகவல் வெளியானது. அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்டானது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிக்கிறார், த்ரிஷா, சஞ்சய் தத், அருண் விஜய், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொள்ளவுள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT