Saturday, February 24, 2024

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்த அஜித் ! அஜித் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

100 வருட சினிமா வரலாற்றில் சரித்திர சாதனை படைத்த ஒரே படம் அஜித்தின் வலிமை ! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில்...

கல்கி 2898 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனேவின் வரவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு, 'கல்கி 2898...

தளபதி விஜய்யின் GOAT படகுழுவிற்கு கண்டிஷன் போட்ட விஜய்

GOAT படம்:நடிகர் விஜய் நடிக்கும் GOAT படம் தற்போது ஷூட்டிங் நடந்து...

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முக்கிய தகவல்கள்:இயக்குனர்: ஜேசன் சஞ்சய் (விஜய்யின் மகன்) தயாரிப்பு: லைகா நிறுவனம் நடிப்பு: துல்கர்...
ADVERTISEMENT

டிசம்பர் 5 ஆம் தேதி, சென்னை காரப்பாக்கத்தில் இருந்து மீட்கப்பட்ட அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை அஜித்குமார் சந்தித்தார். இரண்டு நடிகர்கள் மற்றும் வில்லா சமூகத்தின் உறுப்பினர்களுக்கான பயண ஏற்பாடுகளை அவர் செய்தார். சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நடிகர்கள் இருவரும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பல மணி நேரம் தவித்தனர். அவர்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் படகு மூலம் மீட்டனர்.

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அஜித் சில தினங்களுக்கு முன்புதான் அஜர்பைஜானில் இருந்து முதற்கட்ட செட்யூலை முடித்து சென்னை திரும்பினார்.

ADVERTISEMENT

அதன் பிறகு ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னையிலேயே இருக்கும் அஜித்தை பற்றி கடந்த மூன்று நாள்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது. அதாவது காரப்பாக்கத்தில் ஏற்பட்ட கடும் மழை , புயல் காரணமாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது குடும்பம் வெள்ளத்தில் சிக்கியது.அவர்களுக்கு உதவ தகுந்த போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தது அஜித்தான் என்றும் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

கூடவே அஜித்துடன் இருக்கும் புகைப்படமும் வைரலானது. அவர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியே வரும் போது நல்ல வெளிநாட்டவரைப் போல ஒருவரும் கூட வந்திருக்கிறார். யார் என்று பார்த்தால் பாலிவுட் நடிகர் அமீர்கான் என தெரியவந்தது.

அவர் எப்படி இங்கு மாட்டிக் கொண்டார் என்று விசாரித்ததில் அவரது தாயார் மருத்துவ சிகிச்சைக்காக அவர் சென்னை வந்ததும் அவருடைய தீவிர ரசிகைதான் விஷ்ணு விஷாலின் மனைவி என்றும் அவர்தான் காரப்பாக்கத்தில் தங்கும்படி அறிவுறுத்தியதாகவும் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்தை பற்றி பேசும் போதெல்லாம் அவர் என்ன செய்திருக்கிறார்? என்ன உதவிகளை இதுவரை செய்திருக்கிறார் என்ற கேள்விகள் எல்லாம் எழுந்து வந்தன. இந்தியாவையே உலுக்கிய கஜா புயலால் பல ஊர்கள் நாசமடைந்தன.அப்போது வெள்ள நிவாரண நிதியாக பிரபலங்கள் பலரும் முன்வந்து பண உதவிகளை செய்ய அந்த நேரத்தில் அஜித்தை பற்றியும் அவர் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. கடைசியாக முதல்வர் அறிக்கை ஒன்று வெளிவர அதில் நடிகர் அஜித்குமார் 15 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

அதாவது எந்தவொரு பப்ளிசிட்டியும் செய்யாமல் பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் அஜித் இன்றளவும் செய்து கொண்டுதான் வருகிறார் என அந்த பத்திரிக்கையாளர் கூறினார்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாயை கவனித்துக்கொள்வதற்காக அமீர்கான் சில வாரங்களுக்கு முன்பு சென்னைக்கு இடம் பெயர்ந்தார். அவரது தாயார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துரதிர்ஷ்டவசமாக, டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நகரில் பெய்த கனமழை காரணமாக அமீர் வெள்ளத்தில் சிக்கினார். சூறாவளி மைச்சாங் சென்னை கடற்கரைக்கு அருகில் இருந்தது, இது தீவிர மழைக்கு காரணம்.

விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் இருவரும் மீட்கப்பட்ட காரப்பாக்கத்தில் உள்ள அதே வில்லா சமூகத்தில் தங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT