Saturday, February 24, 2024

விடாமுயற்சி படத்தின் காமெடியனாக நடிக்க இருக்கும் பிரபலம் யார் தெரியுமா ? முதல் முறையாக இணையும் கூட்டணி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

100 வருட சினிமா வரலாற்றில் சரித்திர சாதனை படைத்த ஒரே படம் அஜித்தின் வலிமை ! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில்...

கல்கி 2898 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனேவின் வரவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு, 'கல்கி 2898...

தளபதி விஜய்யின் GOAT படகுழுவிற்கு கண்டிஷன் போட்ட விஜய்

GOAT படம்:நடிகர் விஜய் நடிக்கும் GOAT படம் தற்போது ஷூட்டிங் நடந்து...

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முக்கிய தகவல்கள்:இயக்குனர்: ஜேசன் சஞ்சய் (விஜய்யின் மகன்) தயாரிப்பு: லைகா நிறுவனம் நடிப்பு: துல்கர்...
ADVERTISEMENT

‘தல’ அஜித் குமாரின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயற்சி தற்போது தயாரிப்பில் உள்ளது. படக்குழு அக்டோபரில் அஜர்பைஜானில் படப்பிடிப்பைத் தொடங்கியது, அதன் பிறகு நடிகர் ஒரு அட்டவணை முடிவிற்குப் பிறகு சென்னை திரும்பினார். இப்போது, தல அடுத்த ஷெட்யூலுக்காக அஜர்பைஜானுக்குச் செல்கிறார் என்று கேள்விப்படுகிறோம், இது டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. மகிழ் திருமேனி விடாமுயற்சியை இயக்குகிறார், இதில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் படத்திலிருந்து வெளியேறியதால் அடுத்ததாக மகிழ் திருமேனி படத்தை இயக்குவதற்காக கமிட்டாகியிருக்கிறார்.

ADVERTISEMENT

விடாமுயற்சி: படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஒருகட்டத்தில் இந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதோ என்ற சந்தேகமே ரசிகர்களிடம் வந்துவிட்டது.

அஜர்பைஜானில் ஷூட்டிங்: ஆனால் நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வராமல் இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைலான் நாட்டில் தொடங்கியது. இதில் திரிஷா, ரெஜினா, ப்ரியா பவானி சங்கர், சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. முதல் ஷெட்யூல் ஷூட்டிங் அந்நாட்டில் விறுவிறுப்பாக நடந்தது.

மீண்டும் எங்கு ஷூட்டிங்: ஷூட்டிங்கை முடித்துவிட்டு அஜித்குமார் சென்னை திரும்பியிருக்கிறார். சமீபத்தில்கூட அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷாலுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. படத்தின் ஷூட்டிங் அடுத்ததாக சென்னை, அபுதாபியில் நடக்கும் என்றும் மீண்டும் ஒரு ஷெட்யூலுக்காக அஜர்பைஜானில் படக்குழு முகாமிடும் என்று தெரிகிறது.

சதீஷ்: இந்நிலையில் இப்படத்தில் காமெடியனாக யார் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இதில் நடிகர் சதீஷ் காமெடி ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் ஷூட்டிங்கில் இணைவார் என்றும் தகவல் ஓடுகிறது. சதீஷ் கமிட்டாகியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து அஜித் ரசிகர்களோ, ‘சதீஷின் காமெடிக்கு யாருக்குமே சிரிப்பு வராது. அவரை ஏன் இதில் கமிட் செய்திருக்கிறார்கள். இது ஒர்க் அவுட் ஆகுமா’ என்று கவலையோடு கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

மேலும் விக்னேஷ் சிவன் – அஜித் இணைவதாக இருந்த படத்தில் சந்தானம் நடிக்கவிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. விடாமுயற்சியில் சதீஷுக்கு பதிலாக சந்தானத்தையே போட்டிருக்கலாமே எனவும் அவர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

மகிழ் திருமேனி கடைசியாக கலக்கல் தலைவன் படத்தை இயக்கியது. விடாமுயற்சி மகிழ் மற்றும் அஜித்தின் முதல் கூட்டணி. துணிவுக்குப் பிறகு அஜித், விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டார். இருப்பினும், இயக்குனர் தனது இறுதி ஸ்கிரிப்ட் தயாரிப்பு நிறுவனத்தை ஈர்க்காததால் திட்டத்தில் இருந்து விலகினார். பின்னர், மகிழ் கப்பலில் கொண்டு வரப்பட்டார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT