Tuesday, February 27, 2024

அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை ! ஒகே சொன்ன வெற்றிமாறன் ! இறுதியில் நடந்த மாற்றம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

இயக்குநர் அமீர் விளக்கம்: “சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை”

இயக்குநர் அமீர் இயக்கத்தில் 'இறைவன் மிகப்பெரியவன்' திரைப்படம் உருவாகி வருகிறது. ஜாஃபர்...

இந்தியன் 2 மூன்றாம் பாகம் உறுதியா? புதிய தகவல்கள்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின்...

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘விடாமுயற்சி’ மூலம் ரசிகர்களை கலக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் அவரது 63வது படத்திற்காக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் AK இணையவுள்ளார் என்பதை நாங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்துள்ளோம். இப்போது, ‘ஏகே 64’ பற்றிய செய்திகள் கிடைத்துள்ளன.

அஜீத் குமார் தனது 64வது படமான ‘ஏகே 64’ படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மூலம் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். குறிப்பிடத்தக்க வகையில், ஏகே 63 ஐ ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்ததாக முன்பு கூறப்பட்டது, ஆனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் பின்னர் திட்டத்தில் இணைந்தது. தற்போது ஏகே 64 தயாரிப்பதற்கான வாய்ப்பை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.

ADVERTISEMENT

அஜித் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து 70 நாட்களாக ஒரே செட்யூலில் முடித்து 2024-ம் ஆண்டு சம்மருக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த சூழலில் சூர்யாவின் படம் இப்போது அஜித்தின் கைவசம் வந்திருக்கிறது.

ஏனென்றால் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் சூர்யா இப்போது கங்குவா படம், அதன் தொடர்ச்சியாக லோகேஷின் இரும்புக் கை மாயாவி, சுதா கொங்கராவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்டாகி கொண்டிருக்கிறார்.

ஆனால் வாடிவாசல் படம் மட்டும் தள்ளி போகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் இதில் மட்டும் அஜித் நடித்த இந்த படம் உலகம் முழுவதும் பேசப்படும். வசூலிலும் தாறுமாறான வரவேற்பு கிடைக்கும் என்று வெற்றிமாறன் சூர்யாவிற்கு பதில் அஜித்தை நடிக்க வைக்க பார்த்தார்.இதுதான் அஜித் கெத்து
ஆனால் அஜித், அது சூர்யாவுக்கான கதை, அவர்தான் நடிக்கணும், எனக்கு வேண்டாம் என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டார். சூர்யா எப்போது ஃப்ரீ ஆகி வருகிறாரோ அப்போதே அவரை வைத்து வாடிவாசல் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று வெற்றிமாறனிடம் அஜித் கூறியுள்ளார்.

இதுவே வேறு ஏதாவது ஒரு ஹீரோவாக இருந்தால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கக்கூடிய வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை இப்படி வேண்டாம் என்று சொல்லி இருக்க மாட்டார்கள். இந்த கெத்து அஜித்துக்கு மட்டுமே இருக்கு. அவர் பிற நடிகர்களின் திறமையையும், அவர்களுடைய படங்களையும் மதிக்கக்கூடிய மனுஷன். அதனால் தான் ரசிகர்களும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் ஏற்கனவே வெற்றிமாறனின் ‘விடுதலை’ கதையை தயாரித்து வருகிறது. ‘விடுதலை 2’ மற்றும் ‘வாடிவாசல்’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் இந்த திட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஏகே ‘விடாமுயற்சி’ மற்றும் ‘ஏகே 63’ ஆகியவற்றை முடிக்கிறார். விடாமுயற்சி படத்தின் அடுத்த ஷெட்யூல் விரைவில் துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT