Tuesday, February 27, 2024

விடாமுயற்சி படத்தில் அடுத்த சம்பவம் ரெடி ! வாலி, வரலாறு, மங்காத்த படத்தில் பார்த்ததை விட டெரரான அஜித்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

இயக்குநர் அமீர் விளக்கம்: “சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை”

இயக்குநர் அமீர் இயக்கத்தில் 'இறைவன் மிகப்பெரியவன்' திரைப்படம் உருவாகி வருகிறது. ஜாஃபர்...

இந்தியன் 2 மூன்றாம் பாகம் உறுதியா? புதிய தகவல்கள்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின்...

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...
ADVERTISEMENT

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியுள்ளது. அஜீத் குமார் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றடைந்தனர்.
முந்தைய ஷெட்யூலில், அஜர்பைஜான் ஷெட்யூலின் போது ஒரு தீவிரமான கார் அதிரடி காட்சி படமாக்கப்பட்டது, மேலும் அது சிறப்பாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இருக்கும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது

அஜர்பைஜான்: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அஜித்துடன் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளனர்.அஜித்துடன் இணைந்த பிரபலங்கள்

ADVERTISEMENT

துணிவு வெற்றியைத் தொடர்ந்து ஏகே 62 படத்தில் கமிட்டானார் அஜித். விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப் படத்தை லைகா தயாரிக்கவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 பட இயக்குநரானார். அதன்பின்னர் ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், கடந்த மாதம் தான் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பை தொடங்கினார் மகிழ் திருமேனி. படத்தின் பெரும்பாலான காட்சிகளை அஜர்பைஜானில் முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம். அதன்படி ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கில், அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் இணைந்தனர்.

அதன்பின்னர் இரு வாரங்கள் வரை விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் இந்த வாரம் முதல் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியது. இதற்காக அஜித்தும் த்ரிஷாவும் ஒரே விமானத்தில் அஜர்பைஜான் சென்ற வீடியோ வைரலானது. இந்நிலையில் அவர்களைத் தொடந்து தற்போது ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், நடிகை ரெஜினா ஆகியோரும் அஜர்பைஜான் சென்றுள்ளனர்.

70 நாட்கள் வரை ஒரே ஷெட்யூலில் நடக்கும் இந்தப் படப்பிடிப்பில், அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். முக்கியமாக அஜித், அர்ஜுன் பங்கேற்கும் தரமான ஆக்‌ஷன் சீன்ஸ் ஷூட் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், த்ரிஷாவும் சில ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கவுள்ளாராம். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித், த்ரிஷா, அர்ஜுன் மூவரும் ஏற்கனவே மங்காத்தா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த காம்போ மீண்டும் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு அல்லது பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தப் படம் அஜித் பிறந்தாளை முன்னிட்டு அடுத்தாண்டு மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை தல அஜித்தை ரசிகர்கள் காணாத அளவுக்கு வெறித்தனமான நெகட்டிவ் ரோலில் அடுத்த படத்தில் அஜித் நடிக்கப் போவதாக சூப்பரான ஹாட் அப்டேட் கசிந்துள்ளது. வாலி, வில்லன், வரலாறு, சிட்டிசன், மங்காத்தா என ஏகப்பட்ட படங்களில் தனது க்ரே ஷேடை அஜித் காட்டி நடித்துள்ள நிலையில், அதை விட தாறுமாறான கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளாராம்

‘விடாமுயர்ச்சி’ படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது, மேலும் நடிகர் தனது சமீபத்திய படத்தில் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கிறார்.
ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களுக்குப் பிறகு த்ரிஷா ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேருகிறார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT