Tuesday, February 27, 2024

அதிரடியாக விடாமுயற்சி படத்தில் இருந்து பாதியிலேயே விலகிய முக்கிய பிரபலம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

இதுவரை லால் சலாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !

லால் சலாம் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியான நிலையில், தற்போது...

இயக்குநர் அமீர் விளக்கம்: “சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை”

இயக்குநர் அமீர் இயக்கத்தில் 'இறைவன் மிகப்பெரியவன்' திரைப்படம் உருவாகி வருகிறது. ஜாஃபர்...

இந்தியன் 2 மூன்றாம் பாகம் உறுதியா? புதிய தகவல்கள்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின்...

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...
ADVERTISEMENT

அஜீத் குமார் மற்றும் மகிழ் திருமேனி இருவரும் இணைந்து நடிக்கும் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் அஜர்பைஜானில் தொடங்கினர். அதன்பிறகு இருவரும் திரைப்படத் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.அஜீத் குமாரின் அடுத்த சினிமா முயற்சிக்கு பின் எச் வினோத் திரைப்படம் துணிவு மகிழ் திருமேனி எழுதி இயக்கிய விடா முயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் ரவிச்சந்தரின் இசையமைப்பிலும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவிலும் இடம்பெற்றுள்ளது.

மேலும், என்னை அறிந்தால் , மங்காத்தா, ஜி மற்றும் கிரீடம் ஆகிய படங்களில் நடித்ததைத் தொடர்ந்து, ஐந்தாவது முறையாக நடிகை த்ரிஷா கிருஷ்ணனுடன் அஜித் குமார் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன் சர்ஜா, சஞ்சய் தத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

விடாமுயற்சி படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து பெருமுயற்சி செய்து வருகிறார் நடிகர் அஜித் குமார்.

திடீரென சமீபத்தில் சென்னைக்கு நடிகர் அஜித் வந்து சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் அஜர்பைஜானுக்கு ஷூட்டிங் கிளம்பி சென்று விட்டார்.

இந்நிலையில், திடீரென விடாமுயற்சி படக்குழுவில் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.ஒளிப்பதிவாளர் மாற்றம்: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்து வரும் விடாமுயற்சி படத்தை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இதுவரை ஒளிப்பதிவு செய்து வந்தார். இந்திய திரையுலகின் முன்னனி ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா திடீரென அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கி உள்ள புதிய ஷெட்யூலில் இல்லை என்கிற ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

நீரவ் ஷாவுக்கு பதில் யார்?: நீரவ் ஷாவுக்கு பதிலாக தற்போது ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித்தின் பில்லா படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வந்த நீரவ் ஷா திடீரென மாற்றப்பட்டு தற்போது ஆரம்பம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஓம் பிரகாஷ் இந்த ஒரு ஷெட்யூலுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்காலிகமாகவா அல்லது படத்தில் இருந்து நீரவ் ஷா வெளியேற்றப்பட்டு புதிய ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்யவே அஜித் சென்னை வந்தாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

மகேஷ் பாபுவை போல: குண்டூர் காரம் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே மற்றும் ஒளிப்பதிவாளரை எல்லாம் மகேஷ் பாபு மாற்றியதை போல தற்போது இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தே தீர வேண்டும் என்கிற வெறியில் நடிகர் அஜித் குமார் விக்னேஷ் சிவனை தொடர்ந்து தற்போது ஒளிப்பதிவாளரையும் ஏகே 62 படத்திற்கு மாற்றி விட்டாரா? என்றும் சினிமா வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், இது தற்காலிக மாற்றம் என்றே கூறப்படுகிறது. விரைவில் உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிகிறது.

ஆயுத பூஜை ரிலீஸ்: இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு லியோ படம் வெளியாகி பெரிய வெற்றிப் பெற்றதை போலவே தனது விடாமுயற்சி படத்தையும் ஆயுத பூஜைக்கு வெளியிட அஜித் பிளான் செய்து வருவதாகவும் கூறுகின்ற்னார்.

ஹாலிவுட் படமா?: லியோ படம் ஹிஸ்டர் ஆஃப் வயலென்ஸ் ஹாலிவுட் படத்தை இன்ஸ்பயர் செய்து எடுக்கப்பட்ட நிலையில், பிரேக்டவுன் எனும் ஹாலிவுட் படத்தை தழுவி விடாமுயற்சி உருவாகி வருகிறது என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கூடிய விரைவில் படப்பிடிப்பு முடிந்து இயக்குநர் மகிழ் திருமேனியே அதை ரிவீல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அஜித் குமார் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத் சமீபத்தில் துபாயில் ஒன்றாக புகைப்படம் எடுத்தனர், இது சாத்தியமான ஒத்துழைப்பு குறித்த ஊகங்களை ரசிகர்களிடையே தூண்டியது. விடா முயர்ச்சியில் சஞ்சய் தத் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று முந்தைய வதந்திகள் தெரிவிக்கப்பட்டாலும், படத்தின் தயாரிப்பு குழுவிலிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT