Saturday, February 24, 2024

அஜித் பெயரை கலங்கடிக்க சில விஷயமிகள் செய்யும் நரித்தன வேலை ! வைரலாகும் தகவல்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ஜெயிலர் 2 படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ஜெயிலர் வெற்றிகடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய...

100 வருட சினிமா வரலாற்றில் சரித்திர சாதனை படைத்த ஒரே படம் அஜித்தின் வலிமை ! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில்...

கல்கி 2898 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனேவின் வரவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு, 'கல்கி 2898...

தளபதி விஜய்யின் GOAT படகுழுவிற்கு கண்டிஷன் போட்ட விஜய்

GOAT படம்:நடிகர் விஜய் நடிக்கும் GOAT படம் தற்போது ஷூட்டிங் நடந்து...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் ரசிகர்களுக்கு எதிரான நச்சு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அஜித் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தனது வேலையை ஒழுங்காக பார்த்தால் கூட அவரை வம்புக்கு இழுக்காமல் சிலர் இருக்க மாட்டார்கள்.

நாட்டில் என்ன நடந்தாலும் அஜித் அதுக்கு என்ன செய்தார் என்பதுதான் சமூக வலைத்தளத்தில் பெரிய கேள்வியாக இருக்கும். அதே போன்று எந்த ஹீரோ ஹிட் படம் கொடுத்தாலும், அஜித்தின் படம் தோல்வி அடைந்தது சுட்டிக்காட்டி பேசி தான் சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள் சில முக்கிய ஹீரோக்களின் ரசிகர்கள். இதனால் தான் அஜித் எனக்காக என் ரசிகர்கள் எதுவுமே செய்ய வேண்டாம் என அறிக்கை எல்லாம் விடுகிறார்.

ADVERTISEMENT

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையிலேயே, அவரை எப்படி எல்லாம் டேமேஜ் செய்யலாம் என ஒரு கூட்டம் சுற்றி வருகிறது. போதாத குறைக்கு சென்னை மழை வெள்ளத்தின் போது விஜய் மக்கள் இயக்கம் செய்ததெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. டேமேஜ் ஆகும் விஜய் பெயரை சரி செய்ய, கூட்டு சேர்த்துக் கொண்டு அஜித் பெயரை தேவையில்லாமல் டேமேஜ் செய்ய சில கூட்டம் சதி செய்து கொண்டிருக்கிறது.

சமீபகாலமாக ரஜினி மற்றும் விஜய்க்கு நடுவே போட்டி நிலவுகிறது என்ற சூழல் உருவானபோது, அஜித் ரசிகர்கள் மொத்தமாக ரஜினி பக்கம் சப்போர்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதேபோன்று பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அத்தனை பேருமே அஜித்துக்கு ஏகபோகமாக ஆதரவு கொடுக்கக் கூடியவர்கள் தான்.

கடந்த சில தினங்களாக நடிகர் அஜித்குமாரின் புகைப்படத்தை புரொஃபைல் பிக்சராக வைத்துக் கொண்டு நிறைய பேர் ரஜினியை பற்றி தவறாக பேசி வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய பிரச்சனை உருவாகி கொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் ரஜினியை பற்றி தவறாக பேசுபவர்கள் அஜித் ரசிகர்கள் கிடையாதாம்.

அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பிரச்சனையைக் கிளப்ப விஷமிகள் செய்யும் அபத்தமான வேலைதான் இது. இடையில் சூர்யாவை பற்றியும் தப்பு தப்பாக பேசி அவருடைய ரசிகர்கள் பக்கமும் கொளுத்தி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அஜித் அமைதியாக இருக்கும்போது, அவரை தேடி தேடி இப்படி சில்மிஷ வேலைகள் செய்து இன்னும் அவருக்கு நல்ல பெயர் தான் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பது இந்த விஷமிகளுக்கு தெரிவது இல்லை.

அஜித் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

அஜித் ரசிகர்கள் இந்த விஷமப் பிரச்சாரங்களுக்கு ஈடுபட வேண்டாம். அஜித் எப்போதும் அமைதியாக இருக்க விரும்புகிறார். அவருடைய பெயரை களங்கப்படுத்த முயற்சிக்கும் இந்த விஷமிகளுக்கு செருப்படி கொடுத்து அவர்களை அடித்து ஓட வைக்க வேண்டும்.

அஜித் ரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூக வலைத்தளங்களில் அமைதியான முறையில் இந்த விஷமப் பிரச்சாரங்களுக்கு எதிராக போராட வேண்டும். அஜித்தின் பெயரை தூய்மையாகப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT