Tuesday, February 27, 2024

அயலான் படம் இதுவரை வசூலித்த மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

இந்தியன் 2 மூன்றாம் பாகம் உறுதியா? புதிய தகவல்கள்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின்...

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...

கேட்டாலே மிரளுது 🔥 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஜித்63 படத்தை பற்றிய 🔥 அப்டேட் !

அஜீத் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் வெளியாகி ஒரு...
ADVERTISEMENT

இன்று நேற்று நாளை படம் தமிழில் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாரை செல்போனில் அழைத்து பாராட்ட, “சார் உங்களுக்கு ஒரு கதை இருக்கு.. நடிக்கிறீங்களா?” என கேட்க, அப்படி துவங்கிய படம்தான் “அயலான்”.

ஆனால், இந்த படத்தின் வேலை துவங்கி 4 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இடையில் இந்த படத்தை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் வெவ்வேறு படங்களுக்கு நடிக்கப்போனார். கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்தது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர், பானுப்பிரியா என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ADVERTISEMENT

ஏலியன் ஒன்று பூமியை காப்பாற்ற வருவது போலவும், அதற்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவி செய்கிறார் என்பதையும் ரவிக்குமார் அழகாக திரைக்கதை அமைத்திருந்தார். இப்படத்தில் வி.எப்.எக்ஸ் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்தது.

இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 12ம் தேதி உலகமெங்கும் வெளியானது. படம் சூப்பர் இல்லை என்றாலும் ஓகே என்கிற அளவுக்கு இப்படத்தின் விமரசனங்கள் இருந்தது. ஒருபக்கம் ஏலியன் கான்செப்ட் என்பதால் குழந்தைகளை அழைத்துகொண்டு பெரியவர்களும் தியேட்டருக்கு சென்று இப்படத்தை பார்த்து ரசித்தனர்.

இதன் காரணமாக இப்படம் நல்ல தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், “அயலான்” படம் உலகம் முழுவதும் சேர்த்து 75 கோடியை வசூல் செய்துள்ளதாக அப்படத்தை தயாரித்த கேஜிஆர் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இப்படம் வெற்றி பெற்றதால் அயலான் 2 பட வேலைகளும் துவங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பும் வெளியாகவுள்ளது. இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் வெற்றிக்கு காரணம்

“அயலான்” படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று, ஏலியன் கான்செப்ட். இது தமிழ் சினிமாவில் முதன்முறையாக முழுக்க முழுக்க ஒரு சயின்ஸ் பிக்சன் படமாக எடுக்கப்பட்டது. இந்த கான்செப்ட் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இரண்டாவது, சிவகார்த்திகேயனின் நடிப்பும் திரைக்கதையும். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒரு அறிவியலாளராக நடித்திருந்தார். அவரது நடிப்பும் திரைக்கதையும் ரசிகர்களை ஈர்த்திருந்தன.

மூன்றாவது, வி.எப்.எக்ஸ் காட்சிகள். இந்த படத்தில் வி.எப்.எக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த காட்சிகள் ரசிகர்களை கட்டிப் போட்டன.

இந்த காரணங்களால் “அயலான்” படம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி சிவகார்த்திகேயனுக்கு ஒரு புதிய உத்வேகத்தை தந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT