Saturday, February 24, 2024

இளையராஜா மகள் பவதாரணி இறப்பிற்கு முக்கிய காரணமே இதுவா !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

100 வருட சினிமா வரலாற்றில் சரித்திர சாதனை படைத்த ஒரே படம் அஜித்தின் வலிமை ! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

அஜீத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில்...

கல்கி 2898 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனேவின் வரவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு, 'கல்கி 2898...

தளபதி விஜய்யின் GOAT படகுழுவிற்கு கண்டிஷன் போட்ட விஜய்

GOAT படம்:நடிகர் விஜய் நடிக்கும் GOAT படம் தற்போது ஷூட்டிங் நடந்து...

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முக்கிய தகவல்கள்:இயக்குனர்: ஜேசன் சஞ்சய் (விஜய்யின் மகன்) தயாரிப்பு: லைகா நிறுவனம் நடிப்பு: துல்கர்...
ADVERTISEMENT

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று இரவு இலங்கையில் காலமானார். அவருக்கு 47 வயது. அவரது மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், பவதாரணியின் உறவினர் விலாசினி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

“பவதாரணி எனக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த மாதம் இளையராஜா எனக்கு போன் செய்து, ‘உங்க அக்காவை கடைசியாக வந்து பார்த்துட்டு போ’ என்றார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பவதாரணிக்கு நான்காவது கட்ட கேன்சர் இருப்பது கடந்த மாதம்தான் தெரியவந்தது. மருத்துவர்கள் குடும்பத்திடம் சொன்ன பிறகு, பவதாரணியிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்.

எனது அம்மா பவதாரணியின் ரிப்போர்ட்டுகளை மருத்துவராக இருக்கும் எங்களது உறவினரிடம் காண்பித்தார். அவரோ, ‘பேசாம விட்டுடுங்க’ என்று சொல்லிவிட்டார்.

போன வருடம் கொழுவுக்கு நானும் அம்மாவும் இளையராஜா வீட்டுக்கு சென்றிருந்தோம். அப்போது அவர் ரொம்பவே மெலிந்துவிட்டார். அவரை இன்னும் கொஞ்சம் காலம் வைக்க எல்லா வேலைகளிலும் நாங்கள் இறங்கினோம். ஆனால் மருத்துவர்களோ, முதலில் அவரை உடலை தேற்றிக்கொண்டு வர சொல்லுங்கள். சிகிச்சைகளை அவர் தாங்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள்.

உறவினர் வாசுகி, பவதாரணியின் கணவர் சபரி, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பவதாவை அழைத்துக்கொண்டு இலங்கை சென்றார்கள். சரி ஆயுர்வேதா சிகிச்சையில் இருக்கிறார் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இப்படி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

பவதாரணி நீண்ட காலம் உயிரோடு இருக்கமாட்டார் எங்களுக்கு தெரியும். இருந்தாலும் அவரை இழப்பதற்கு நாங்க தயாராக இல்லை. முன்பே அவரது பித்தப்பையில் பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அதை இவர்கள் ஸ்டோன் என்று நினைத்துக்கொண்டு அசால்ட்டாக விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.

ஒருமுறை அவர் மருத்துவமனையில் இருந்தார். அப்போது எழுந்து அமர்ந்து பேசும் நிலையில்தான் இருந்தார். அந்த சமயத்தில் எனது தந்தை (பவதாரணியின் தாய் மாமா) அவரை பார்ப்பதற்காக சென்றார். எனது தந்தையை பார்த்தவுடனேயே பவதாரணி கதறி அழுதுவிட்டார். ஆனால் நீங்கள் பதிலுக்கு அழக்கூடாது; அதையும் வெளியில் காண்பித்துக்கொள்ளக்கூடாது என்று தந்தையிடம் ஏற்கனவே நாங்கள் சொல்லியிருந்தோம். எனவே அவர் அனைத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று தைரியம் சொல்லிவிட்டு வந்தார்” என்றார்.

பவதாரணியின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT