Monday, March 4, 2024

தளபதி விஜய் மகனுக்காக அஜித் செய்த உதவி! அடடா என்னா மனுஷன்யா இவரு !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

தமன்னா 19 ஆண்டுகளாக திரையுலகில் ஜொலிக்கும் நட்சத்திரம்!

தமன்னா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகை 2005ல்...

அம்பானிகளின் விருந்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் ஜாம்நகர் வந்தனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், அவர்களது மகள்...

அஜித் மட்டும் இந்த மாதிரியான படத்தில் வில்லனாக நடித்தால் ! தமிழ் சினிமா உலகம் நிச்சயம் அதிரும் கூறியது யார் தெரியுமா

த்ரிஷா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அஜித்குமாருடன் இணைந்து விடாமுயற்சி...
ADVERTISEMENT

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது தந்தையுடன் இணைந்து ஆன் ஸ்கிரீனில் சில முறை தோன்றியிருக்கிறார். போக்கிரி படத்தில் வந்த “வசந்த முல்லை” பாடலிலும், வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்றிருந்த “நான் அடிச்சா தாங்க மாட்ட” பாடலிலும் அப்பாவுடன் சேர்ந்து குத்தாட்டம் பாேட்டிருக்கிறார். அதன் பிறகு சினிமா பக்கமே வராத இவர், அமெரிக்காவிற்கு படிக்க சென்றுவிட்டார்.

சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் படித்த இவர், கனடாவிற்கு உயர் படிப்பிற்காக சென்றார். டொரன்டோ நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்பட கலை படிப்பை முடித்த ஜேசன், சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா திரும்பினார். சொந்த ஊருக்கு வந்த கையோடு, பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ராெடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.

ADVERTISEMENT

நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படம் என்பதால், இப்படம் குறித்த அப்டேட்டுகள் மீது ரசிகர்கள் எப்போதும் ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்தனர். இந்நிலையில் விஜய் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை வெளிவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட விஜய் தனது மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்துவிட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. மேலும் விஜய் மகன் சஞ்சய் அவருடைய தந்தை விஜய் உடன் பேசுவது கிடையாது என்றும், அம்மா சங்கீதா பக்கம் தான் சஞ்சய் இருந்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் சஞ்சயின் படத்திற்கு பிஆர்ஓவாக சுரேஷ் சந்திராவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். சுரேஷ் சந்திரா வேற யாரும் இல்லை நடிகர் அஜித்குமார் சம்பந்தமான செய்திகளை எல்லாம் விளம்பர தூதராக வெளியிட்டு வருபவர். இவர் அஜித்திற்கு மட்டும் இல்லாமல் இன்னும் சில படங்களையும் விளம்பரப்படுத்தும் பி ஆர் ஓவாக இருக்கிறார்.

தற்போது இவரை தான் விஜயின் மகன் படத்திற்கு பிஆர்ஓவாக லைக்கா நிறுவனம் தேர்ந்தெடுத்து இருக்கிறது. இதுகுறித்து சுரேஷ் சந்திராவிடம் லைக்கா நிறுவனம் பேசிய போது முதலில் தயங்கி இருக்கிறார். பின் அஜித்திடம் சென்று கேட்டபோது அஜித் தயங்காமல் இந்த வேலையை செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறாரா. பின் அஜித்தும் தொலைபேசி மூலமாக விஜய்யின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள், அஜித் நல்ல மனுஷன்பா என்றெல்லாம் ஹாஸ்டாக்குகளை உருவாக்கி அவரை பாராட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம், விஜய் தன்னுடைய மகன் படத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அவருடைய தாய் சங்கீதா மூலம் தான் லைக்கா நிறுவனம் சஞ்சய் படத்தை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சஞ்சய் இயக்குநராவதற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய்யின் மனைவி சங்கீதா தான் என்ற செய்தியும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் குறித்து இதுவரை வாழ்ந்து கூட விஜய் தெரிவித்து மகன் இயக்க இருக்கும் படத்திற்கு ஒரு விளம்பரத்தை தேடி தர விஜய் முன்வராத நிலையில், அஜித் முன்வந்து அவருடைய உதவியாளர் சுரேஷ் சந்திரா மூலம் உதவி செய்ய வைத்துள்ளதை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT