Tuesday, February 27, 2024

இறப்பதற்கு முன் கடைசியாக பவதாரணி கூறிய அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...

கேட்டாலே மிரளுது 🔥 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஜித்63 படத்தை பற்றிய 🔥 அப்டேட் !

அஜீத் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் வெளியாகி ஒரு...

சமுத்திரக்கனி’ஸ் யாவரும் வல்லவரே படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம்...
ADVERTISEMENT

இளையராஜாவின் மகள் பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47.

பவதாரிணி 1975 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இளையராஜாவின் மூத்த மகளான இவர், பிரபுதேவா நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் “மஸ்தானா மஸ்தானா” பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார்.

ADVERTISEMENT

இவர், இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல்கள் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் இடம்பெற்றுள்ளன.

இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் இவர் பாடிய “மயில் போலப் பொண்ணு ஒன்னு” பாடல் இவருக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது.

இவர், 2002 ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான “மித்ர் மை பிரெண்ட்” என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான “ஃபிர் மிலெங்கே” என்ற படத்திலும் இசையமைத்தார்.

தமிழில் அமிர்தம், இலக்கணம், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பவதாரிணியின் மறைவுக்கு தமிழ் திரையுலகில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் இரங்கல்கள் குவிந்து வருகின்றன.

பவதாரிணியின் பேட்டி வைரல்

பவதாரிணி இறந்ததையடுத்து, இவர் முன்னர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில், “சின்ன வயதில் இருந்து அப்பா கம்போசிங் போவார். விடுமுறையில் நான், யுவன், அண்ணா எல்லாரும் அங்கே போவோம். ஒரு அறையில் அண்ணன், இன்னொரு ரூமில் யுவன் கம்போசிங் பண்ணுவார். நான், எல்லா அறைகளிலும் மாறி மாறி போய் பார்ப்பேன். அவர்களுக்கு முதலில் நான் தான் ட்ராக் சிங்கரா இருந்தேன்.

அதிகமாக அண்ணனுக்கு ட்ராக் பாடுவேன். வீட்டிலேயே இது நடைமுறையாகிவிட்டது. காலையில் எழுந்ததும், அம்மா சிடி போடுவார். அது பெரும்பாலும் மேற்கத்திய இசையாக இருக்கும். அப்படி தான் எங்களுக்கு விடியும். இசைக்கு மத்தியில் தான், நாங்கள் எங்கள் வேலைகளை செய்து கொண்டிருப்போம்” என்று தெரிவித்தார்.

மேலும், “வீட்டில் ஒரே மிருதங்கம் சத்தம், இன்னொரு பக்கம் யுவன் பாடிட்டு இருப்பான். எல்லா சத்தமும் சேர்ந்து ஒரே மனஉளைச்சலா இருக்கும். ஒரு கட்டத்தில் அழும் நிலைக்கு வந்துவிடுவேன். அம்மா தான் என்னை தாங்கிக் கொள்வார்” என்று பேசியார்.

“அப்பாவுக்கு நிறை பாடல் பாடியிருக்கேன். அப்போ எனக்கு எதுவும் பெருசா தெரியாது. அப்போ சொல்வதை பாடுவேன். பின்னால் தான், நான் என் குரலை புரிந்து கொண்டேன். ‘இப்படி பாடலாம், இதை மாற்றி பாடலாம்’ என்று தெரிந்து கொண்டேன். அப்பாவிடம் பாடும் போது, அவர் சொல்வதை செய்ய வேண்டுமே என்கிற பதட்டம் தான் இருக்கும்” என்று பவதாரிணி தெரிவித்தார்.

“அப்பா எல்லா இடங்களைப் போலவே, வீட்டிலும் கறாரா தான் இருப்பார். எங்க வீட்டில் டைனிங் டேபிள் கொஞ்சம் வித்தியாசமானது. அண்ணன்

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT