Tuesday, February 27, 2024

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “ரெபெல்” படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...

கேட்டாலே மிரளுது 🔥 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஜித்63 படத்தை பற்றிய 🔥 அப்டேட் !

அஜீத் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் வெளியாகி ஒரு...

சமுத்திரக்கனி’ஸ் யாவரும் வல்லவரே படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம்...
ADVERTISEMENT

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் காட்டிவரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி ரிலீசுக்காக காத்திருக்கும் படங்களில் ரெபெல் படமும் ஒன்று. அறிமுக இயக்குர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் மமிதா பைஜு, வெங்கடேஷ், ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார். படம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் டீசர் வெளியானது. நடிகர் சூர்யா இந்த டீசரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். கடந்த 1980களின் காலகட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் நிக்கேஷ் முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார். மேலும் தமிழ் மக்களுக்கான முக்கியமான படமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். காதல், நகைச்சுவை மற்றும் அரசியல் கலந்த படமாக ரெபெல் உருவாகியுள்ளதாகவும் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் மார்ச் 22ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக ஜிவி பிரகாஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இன்றைய தினம் குடியரசு தினத்திற்கு வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் மமிதா இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். மூணாறு, கோவை போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை குடியரசு தினத்தையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் ரிலீசாக இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள், இசை வெளியீடு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிட உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதைக்களம் குறித்து அதிகம் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், படத்தின் டீசர் மூலம், 80-களின் காலகட்டத்தில் மாணவர்களின் பிரச்சினைகள் மற்றும் அரசியல் சூழலை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. ஜிவி பிரகாஷ் மற்றும் மமிதா பைஜூவின் காதல், நகைச்சுவை மற்றும் அரசியல் சம்பவங்கள் ஆகியவை படத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “சூப்பர் ஸ்டார்” திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு, ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரெபெல் திரைப்படம் எந்த அளவிற்கு வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT