Tuesday, February 27, 2024

ரஜினி, சரத்குமார் இணைந்து நடிக்கத் திட்டமிட்ட படம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...

கேட்டாலே மிரளுது 🔥 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அஜித்63 படத்தை பற்றிய 🔥 அப்டேட் !

அஜீத் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் வெளியாகி ஒரு...

சமுத்திரக்கனி’ஸ் யாவரும் வல்லவரே படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் சமுத்திரக்கனியின் யாவரும் வல்லவரே திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பலமான திரைபின்புலமும் இல்லாமல், தனக்குரிய பாதையை தானே வடிவமைத்து முன்னுக்கு வந்தவர்கள் ரஜினிகாந்த் மற்றும் சரத்குமார். இவர்களுக்கு இடையில் இருந்த ஆரோக்கியமான நட்பு பற்றி கோபிநாத் அவர்களின் நேர்கோணலில் சுவாரசியமாக பகிர்ந்திருந்தார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

சரத்குமார் அவர்கள் எடுத்த எடுப்பிலேயே நடிகனாக தோன்றவில்லை. முதலில் புலன்விசாரணை போன்ற படங்களில் நெகட்டிவ் ரோலில் வந்து தனக்கான முத்திரையை பதித்தவர், சூரியன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த சரத்குமார், தமிழக அரசியலிலும் பங்கெடுத்து மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறார்.

ADVERTISEMENT

நாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று வீம்பு பண்ணாமல், “காஞ்சனா” போன்ற பெண் வேடங்களிலும், குண சித்திர நடிகராகவும், தந்தை வேடம் என திரையில் தோன்றி கிடைக்கிற பாலுக்கு சிக்ஸர் அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சரத்குமார். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் போர்த்தொழில் போன்ற திரைப்படங்கள் நேர்மறையான விமர்சனங்களுடன் வசூலிலும் வெற்றி பெற்றன.

கோபிநாத் உடனான நேர்காணலின் போது, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உங்களை வைத்து படம் பண்ண திட்டம் போட்டாராமே?” என்ற கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், ஒரு சமயம் நானும் சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடிப்பதாக இருந்தது என்று தொடங்கி, அந்த கதையை சுவாரசியமாக கூறினார்.

“ரஜினி ஒரு முறை என்னை அழைத்து, ‘சுப்ரீம் ஸ்டார்! சூப்பர் ஸ்டார்! இருவரும் இணைந்து படம் நடித்தால், நல்லா இருக்கும்ல?’ என்று கூறினார். அதற்கு தகுந்தபடி படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் எனக்கு விவரித்தார்.

நான் நம் நாட்டு தேசிய காவல் அதிகாரி போலவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்டர்நேஷனல் உளவாளியாக நடிப்பது போல கதையை ரெடி பண்ணி, சீன் பை சீன் மாஸாக கூறினேன். இப்படத்தை பாட்ஷா பட புகழ் சுரேஷ்கிருஷ்ணா இயக்குனரை வைத்து இயக்குவதாகவும் தீர்மானம் செய்திருந்தோம்.”

“பல்வேறு காரணங்களால், கதையுடன் நிறுத்தப்பட்டது இந்த உரையாடல். நடிப்பில் கெத்து காட்டும் ரஜினிக்கு இவ்வளவு திறமைகள் உள்ளது என்பதை இந்த நேர்கோணலின் வழியே தெரிகிறது. 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் நடிகர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருந்தது என்பதை பல நிகழ்ச்சிகளில் பகிர்ந்துள்ளனர் நடிகர்கள். அற்புதமான திரைக்கதை! கதையுடன் ஒன்ற வைக்கும் நடிகர்களின் நடிப்பு! அவர்களின் நட்பு! ஆகியவை தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான ஒன்றாக இருப்பது நலமே.”

இந்த தகவல் ரஜினி மற்றும் சரத்குமார் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தால், அது தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான சம்பவமாக இருந்திருக்கும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT