Monday, March 4, 2024

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது: ஸ்டாலின் உறுதி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

யப்பா சாமி சைலன்டாக அம்பானி வீட்டு திருமணத்தில் என்ட்ரி கொடுத்து அதிர வைத்த அஜித் !

முக்கிய அம்சங்கள்:ஜாம்நகரில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து...

வரலஷ்மி சரத்குமார் கலைக் கலைஞரான நீச்சோலை ஷாதேவ் உடன் நிச்சயதார்த்தம்

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ்...

தமன்னா 19 ஆண்டுகளாக திரையுலகில் ஜொலிக்கும் நட்சத்திரம்!

தமன்னா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகை 2005ல்...
ADVERTISEMENT

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நடைமுறைப்படுத்தப்படாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பாஜகவை சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.

ADVERTISEMENT

இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுக.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலினின் இந்த அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவரது அறிக்கையை வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT