Monday, March 4, 2024

விடாமுயற்சி படத்திற்காக அஜித்திடம் இருந்து ஒகே வாங்கிய தனுஷ் ! உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகரக்ள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

வரலஷ்மி சரத்குமார் கலைக் கலைஞரான நீச்சோலை ஷாதேவ் உடன் நிச்சயதார்த்தம்

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ்...

தமன்னா 19 ஆண்டுகளாக திரையுலகில் ஜொலிக்கும் நட்சத்திரம்!

தமன்னா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகை 2005ல்...

அம்பானிகளின் விருந்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் ஜாம்நகர் வந்தனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், அவர்களது மகள்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு “விடாமுயற்சி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி, தற்போது இரண்டு ஷெட்யூல்கள் முடிந்துவிட்டன.

ADVERTISEMENT

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. திரையரங்கில் படம் வெளியான பிறகு நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெட்ஃப்ளிக்ஸ் என்பது உலகின் மிகப்பெரிய ஓடிடி தளமாகும். அதில் விடாமுயற்சி படம் வெளியாகும் என்பதால், படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு சென்றடைவதற்கு வாய்ப்புள்ளது.

படத்தின் கதை மற்றும் திரைக்கதை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், படம் ஒரு அதிரடி திரில்லர் படமாக உருவாகும் என்று கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் விடாமுயற்சி படத்தின் அனைத்து பாடல்களையும் முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் நான்கு பாடல்களும் 2 தீம் மியூசிக்களும் இடம் பெற்றுள்ளன. அதில் அஜித்திற்கு ஒரு காதல் பாடல், அஜீததின் அறிமுக பாடல், கொண்டாட்டமான பாடல், ஒரு மெலடி பாடல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

விடாமுயற்சி படத்தின் மெயின் தீம் மியூசிக் இதற்கு முன்னர் இவர்கள் கூட்டணியில் உருவாகிய விவேகம் வேதாளம் படத்தின் தீம் மியூசிக் போன்று மரண மாசாக வந்துள்ளதாகவும், கண்டிப்பாக இந்த தீம் மியூசிக் மிகப் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடி உள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக அனிருத் இசையமைக்கும் படங்களில் யாராவது ஒரு நடிகரை பாட வைத்து விடுவார். அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார்.

இந்த தகவலை விடாமுயற்சி குழுவினரிடம் கேட்டபொழுது உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இந்த தகவலை பிரபல முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

ஒருவேளை நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் பாடலைப் பாடி இருந்தால் அந்தப் பாடல் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மட்டுமில்லாமல் அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு பக்காவான ட்ரீட்டாக அமையும் என தெரிகிறது.

படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் 2023-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT