Tuesday, February 27, 2024

அரசியலில் களமிறங்கும் விஜய்க்கு போட்டியாக அஜித் எடுக்கப்போகும் அதிரடி முடிவு !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

இயக்குநர் அமீர் விளக்கம்: “சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை”

இயக்குநர் அமீர் இயக்கத்தில் 'இறைவன் மிகப்பெரியவன்' திரைப்படம் உருவாகி வருகிறது. ஜாஃபர்...

இந்தியன் 2 மூன்றாம் பாகம் உறுதியா? புதிய தகவல்கள்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின்...

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சி!

கொல்கத்தாவில் 24 வயது இளைஞர் கரோனா தொற்றால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை...

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தின் சென்சார் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா இமை போல் காக்கா படத்தின் தணிக்கை...
ADVERTISEMENT

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் விஜய், தமிழகத்தின் சினிமா-அரசியல் நிலப்பரப்பில் சமீபத்திய சேர்க்கையாக மாறி, அரசியலில் இறங்கத் தயாராகிவிட்டார் என்று செவ்வாய்க்கிழமை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிப்ரவரி முதல் வாரத்தில் புது டெல்லியில் இன்னும் பெயரிடப்படாத தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய நடிகர் திட்டமிட்டுள்ளார்.

வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதை விட, 2026 சட்டசபை தேர்தலில் விஜய் களமிறங்குவதற்கான களத்தை அமைத்து, கட்சியின் பதிவு உடனடி என்று நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. பல சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகரின் பதிவு செய்யப்பட்ட ரசிகர் குழுவான விஜய் மக்கள் இயக்கம் முழு அளவிலான அரசியல் கட்சியாக மாற்றப்பட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. நடிகருக்கு நெருக்கமானவர்களின் கூற்றுப்படி, கேரளா மற்றும் கர்நாடகாவில் அவரது வலுவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ரசிகர் பட்டாளத்தின் காரணமாக, கட்சியின் வரம்பு தமிழகத்திற்கு அப்பாலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

தமிழக அரசியலில் எப்படியாவது நிலைத்து நிற்க வேண்டும் என்று பிஜேபி கட்சி பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிராக ஸ்ட்ராங்கான ஒரு பிரபலம் கிடைத்தால் அதன் மூலம் அந்த கட்சியை தமிழ்நாட்டில் வளர்த்து விட வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய நோக்கம். ஆனால் துரதிஷ்டவசமாக பிஜேபி கட்சிக்கு அப்படி ஒரு ஆள் இன்று வரை சிக்க வில்லை.

நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்தே அவருடைய குறிக்கோளாக இருந்தது ரஜினியை தமிழக அரசியலில் பிஜேபிக்கு ஆதரவாக களம் இறக்க வேண்டும் என்று தான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த சமயத்தில் ரஜினியை எப்படியாவது உள்ளே கொண்டு வந்து விட வேண்டும் என பிஜேபி கட்சி முயற்சி செய்தது. ரஜினியும் தான் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவிப்பு முதற்கொண்டு வெளியிட்டார்.

ஆனால் தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி ரஜினி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அரசியலில் களமிறங்க போகிறேன் என அறிவித்திருந்த ரஜினி தன்னுடைய கொள்கையாக ஆன்மீக அரசியலை சொன்னவுடன் அவருக்கு தமிழகம் முழுக்க பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அவர் அரசியலில் பின்வாங்க இது கூட முக்கிய காரணம்.அடுத்து என்ன செய்யலாம் என பிஜேபி கட்சி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனியும் தாமதித்தால் தமிழ்நாட்டில் பிஜேபி என்ற கட்சி இல்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்து அந்த கட்சி வலை விரித்து இருப்பது நடிகர் அஜித்குமாருக்கு தான். முக்கிய பிரபலத்தை வைத்து அஜித்துக்கு வலை வீச தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ரொம்பவும் தைரியமாக பிஜேபி கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருபவர்கள் ஒரு சிலர் தான். அதில் முக்கியமான ஒருவர் தான் பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே. இவரை வைத்து தான் அஜித்குமாரை பிஜேபி கட்சியில் சேர்க்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இவர் அஜித்துடன் இணைந்து நடித்த போது இருவருக்குள்ளும் நல்ல நட்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஜினி அரசியலுக்கு வர இருந்த போது பாண்டே தான் அவருக்கு முழுக்க முழுக்க ஆலோசனை கொடுத்து வந்தது. ரஜினியை விட்ட மாதிரி அஜித்தை அவர் விடுவதாய் இல்லை. அஜித்திற்கு மூளை சலவை செய்ய அவர் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். விஜய் மற்றும் அஜித் இருவருக்குமிடையே தொழில் போட்டி இருப்பதால் அரசியலிலும் மோத அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் அரசியல் பேச்சு காட்டு தீ போல் பரவி கொண்டிருக்கும் நிலையில், அதை தண்ணீர் ஊற்றி அணைப்பதற்காக விடாமுயற்சி படத்தின் First லுக் வெளியாகும் என்பது போல் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி விடாமுயற்சி படத்தின் First லுக் பிப்ரவரி 2ஆம் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென தற்போது இப்படியொரு செய்தியை அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.49 வயதான நடிகர், மாநிலத்தின் சராசரி அரசியல்வாதியை விட மிகவும் இளையவர். திமுகவின் உதயநிதி ஸ்டாலின் (46) மற்றும் மாநில பாஜக தலைவர் கே அண்ணாமலை (38) போன்ற இளம் அரசியல்வாதிகள் குழுவில் அவர் இருப்பார். இந்த குழுவில், திரைப்பட இயக்குனராக இருந்து ஆக்ரோஷமான தமிழ் தேசியவாதியாக மாறிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், 57 வயது மூத்தவர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT