Monday, March 4, 2024

விடாமுயற்சி நீங்க நினைக்கற மாதிரி இருக்காது !! மீண்டும் உண்மை சம்பவத்தை கையில் எடுத்த அஜித் !!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ஐஸ்வர்யா ராஜேஷின் வலையம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அறிமுக இயக்குனர் மனோ பாரதி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வலையம்...

யப்பா சாமி சைலன்டாக அம்பானி வீட்டு திருமணத்தில் என்ட்ரி கொடுத்து அதிர வைத்த அஜித் !

முக்கிய அம்சங்கள்:ஜாம்நகரில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து...

வரலஷ்மி சரத்குமார் கலைக் கலைஞரான நீச்சோலை ஷாதேவ் உடன் நிச்சயதார்த்தம்

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ்...
ADVERTISEMENT

மகிழ் திருமேனி அஜித் குமார் தனது ஐந்தாவது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குகிறார், இது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு ரேசி ஆக்ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் அக்டோபர் முதல் அஜர்பைஜானில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர், மேலும் அதிகாரப்பூர்வ புதுப்பிப்பின்படி இந்த அட்டவணை சில நாட்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பரபரப்பான செய்தியின்படி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி நடுப்பகுதியில் வெளியிடப்பட உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ், பிப்ரவரி 9 ஆம் தேதி, தங்களின் மற்றொரு தயாரிப்பு முயற்சியான ‘லால் சலாம்’ வெளியான பிறகு, அடுத்த மாதம் முதல் விடாமுயற்சி குறித்த புதுப்பிப்புகளை தவறாமல் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.

ADVERTISEMENT

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித்குமார் தன்னுடைய 62ஆவது படமான துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கமிட்டானார். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லாததால் அதிலிருந்து வெளியேறினார்.

விடாமுயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித் 62அவது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் இதுவரை படத்திலிருந்து வெளியாகவில்லை. ஆகினும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை விரைவில் முடித்து இந்த வருட கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார்.குட்டி பிரேக் எடுத்த அஜித்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்ததோடு புதிய லொகேஷன் தேடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக்: இந்நிலையில் விடாமுயற்சி படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு டூயட் பாடல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான ஃபோட்டோஷூட்டும் சமீபத்தில்தான் முடிந்தது என்றும்; விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்க்கலாம் என்றும் ஒரு தகவல் ஓட ஆரம்பித்திருக்கிறது.என்ன கதை?: இதற்கிடையே விடாமுயற்சி படத்துடைய கதையின் ஒன்லைன் இதுதான் என்றும் ரசிகர்கள் சிலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

அதன்படி அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவி. அவர்கள் இருவரும் ஒரு பணி நிமித்தமாக வெளிநாடு செல்கின்றனர். அப்போது திரிஷாவை வில்லன் குரூப் கடத்திவிடுகிறது. அவர்களிடமிருந்து திரிஷாவை எப்படி மீட்கிறார் என்பதுதான் அது என ஒருதரப்பினர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. லைன் சாதாரணமாக இருந்தாலும் கண்டிப்பாக மகிழ் திருமேனி திரைக்கதையில் மேஜிக் செய்துவிடுவார் என்ற கருத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் ஓடிடியை பொறுத்தவரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச்சில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கைகளை நம்பினால், படம் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் பிரமாண்டமாக வெளியிடப்படும். அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, மேபு ஜார்ஜ் பால் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷின் DOP உடன் அனிருத் இசையமைக்கிறார் மற்றும் சுப்ரீம் சுந்தரின் சண்டைக்காட்சிகள்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT