Monday, April 22, 2024

பில்லா ரீ ரிலீஸையே தெறிக்கவிட்ட அஜித் ஃபேன்ஸ் – 17 வருடத்திற்கு பிறகும் மாஸ் காட்டிய “டேவிட் பில்லா”!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

அடி தூள் செம சென்சேஷ்னலான ஹீரோயின் உடன் டூயட் பாடும் அஜித் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் அஜித் தற்போது "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து: அந்தணன் சொன்ன ரகசியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். தற்போது...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் தலைவர் 171வது படத்தின் டீசர் இதோ !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் ரஜினிகாந்தின்...

அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் ! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட் !

நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக...
ADVERTISEMENT

அஜித் குமார் நடித்த பில்லா திரைப்படம் அமிதாப் பச்சன் நடித்த டான் காவியத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படம் எத்தனை முறை ரீமேக் செய்யப்பட்டது என்பது இப்போது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆவதால், அஜித்தின் பில்லாவும் நடிகர் ரசிகர்களையும், திரையுலக பிரியர்களையும் கவரும் வகையில் தயாராகி வருகிறது.பில்லா திரைப்படம் முதன்முதலில் டிசம்பர் 14, 2007 அன்று திரைக்கு வந்தபோது, திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நயன்தாராவின் பங்களிப்புடன் தீப்பிடித்தது. இப்படத்தின் அவரது பிகினி காட்சிகள் கோலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது, அது அப்போது ஆத்திரமடைந்தது.

ADVERTISEMENT

வேட்டையன், தங்கலான், கங்குவா என்று அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருந்தாலும், எவர் கிரீன் திரைப்படமாக இருக்கும் சில படங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் குறையவே குறையாது. அப்படிப்பட்ட ரசிகர்களுக்காகவே 20 ஆண்டுகளுக்கு முன் தியேட்டரை அலறவிட்ட திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் அஜித்திற்கு திருப்புமுனையாக அமைந்த பில்லா திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது.

இயக்குநர் ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இதில் ரஜினிகாந்த் உடன் ஸ்ரீ பிரியா, பாலாஜி, தேங்காய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ரஜினிகடத்தல்காரர் மற்றும் அப்பாவியான நபர் என இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது திரையரங்குகளில் 260 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படம் வெளியாகி 17 வருடங்களுக்கு பிறகு பில்லா என்ற பெயரில் அஜித் நடித்து இருந்தார். விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் உருவான பில்லா திரைப்படம் கடந்த 2007ம் ஆண்டு வெளியானது. என்னதான் நடிகர் ரஜினியின் பில்லா பட ரீமேக் என்றாலும், ஏகே ஸ்டைலில் உருவான படம் நல்ல வரவேற்பையே பெற்றது. அஜித்துக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்த இப்படம் அஜித்குமாரின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் பிஜிஎம் கிங் என்ற பெயரை வாங்கி கொடுத்த இந்த படத்தில், நமீதா, பிரபு,ரஹ்மான்,ஆதித்யா மேனன், சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படம் வசூல் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அண்மைக்காலமாக ரீ ரிலீஸ் ஆகும் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கமல் நடித்த ஆளவந்தான் புதிய தொழில்நுட்பத்துடன் தியேட்டரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த முத்து, த்ரி,மயக்கம் என்ன என அடுத்தடுத்த படங்கள் வெளியானது. அதேபோல காதலர் தினத்தை முன்னிட்டு காதலை போற்றும் திரைப்படமான சிவா மனசுல சக்தி, 96, பிரேமம், சீதா ராமம் போன்ற படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன.

பில்லா ரீ ரிலீஸ்: அந்த வகையில் இன்று அஜித்தின் பில்லா 1 திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்திற்கு பலமுறை நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனையடுத்து, படம் மீண்டும் நீண்ட மாதங்களுக்கு பிறகு வரும் பிப்ரவரி 23ஆம் தேதியான இன்று தமிழகம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. இதனை அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பில்லாவில் அஜித்குமார், பிரபு, ரஹ்மான், நயன்தாரா, நமீதா, சந்தானம், ஆதித்யா மேனின், ஜான் விஜய், யோக் ஜேபி, ஹேசல் கீச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் பில்லாவை ஆனந்தா பிக்சர் சர்க்யூட் பேனரில் எல் சுரேஷ் மற்றும் அப்துர்ரஹ்மான் தயாரித்துள்ளனர். அசல் கதையை சலீம்-ஜாவேத் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணியாற்றினார். யுவன் ஷங்கர் ராஜா படத்தின் முழு பின்னணி இசையையும், படத்திற்கான இசையையும் அமைத்துள்ளார்

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT