Saturday, April 13, 2024

ரயில் டிக்கெட் கட்டணம் குறைப்பு: மகிழ்ச்சியான செய்தி!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

மேஷ ராசிக்கான குரோதி வருடப் பலன்கள் 2024

பொது:சாமர்த்தியமான பேச்சின் மூலம் அனுகூலம் பெறலாம். வீண் வாக்குவாதம் பகை வளர்ப்பதை தவிர்க்கவும். எல்லோரிடமும்...

எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்? சாப்பிடுவதற்கு முன், இடையில், அல்லது பின்?

தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், எந்த நேரத்தில் தண்ணீர்...

கெட்ட கொழுப்பை கரைக்கும் அற்புத சட்னி!

சென்னை: இன்றைய காலகட்டத்தில், தவறான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை...

பல்லி சத்தம் சாஸ்திரம் சொல்வது என்ன?

பழங்காலத்தில், பல்லி சத்தம் எழுப்பும் திசையை வைத்து பல சகுனங்களை நம்...
ADVERTISEMENT

2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து, பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 30 ரூபாயாக இருந்தது. இது தினசரி ரயில் பயணிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரும் சுமையாக அமைந்திருந்தது.

கொரோனா பாதிப்பு குறைந்து இயல்புநிலை திரும்பிய பிறகும் கூட, இந்த உயர் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதனை குறைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், பயணிகள் ரயில்களில் 20 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இனி பயணிகள் ரயில்களில் கொரோனா காலத்துக்கு முன்பிருந்த கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இந்த முறை உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பயணிகள் ரயில்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரயில் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT