Monday, April 22, 2024

போடுறா வெடிய 500 கோடி பட்ஜெட்டில் விடாமுயற்சி படத்தின் இன்ட்ரோ சாங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

அடி தூள் செம சென்சேஷ்னலான ஹீரோயின் உடன் டூயட் பாடும் அஜித் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் அஜித் தற்போது "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து: அந்தணன் சொன்ன ரகசியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். தற்போது...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் தலைவர் 171வது படத்தின் டீசர் இதோ !

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் ரஜினிகாந்தின்...

அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் ! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட் !

நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக...
ADVERTISEMENT

மங்காத்தா நடிகரை தவிர, படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், அர்ஜுன் சர்ஜா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யூகங்களின்படி, சஞ்சய் தத்தும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார். இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் காத்திருக்கிறது.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. எப்போதும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித்குமார் தன்னுடைய 62ஆவது படத்தில் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே கமிட்டானார். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு திருப்தி இல்லாததால் அதிலிருந்து வெளியேறினார்.விடாமுயற்சி: விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித் 62அவது படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனி கமிட்டானார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி; அதற்கு பிறகு வேறு எந்த அப்டேட்டும் இதுவரை படத்திலிருந்து வெளியாகவில்லை. ஆகினும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை விரைவில் முடித்து இந்த வருட கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார்.

அடுத்த லொக்கேஷன்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்ததோடு புதிய லொக்கேஷன் தேடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன கதை? விடாமுயற்சி படத்துடைய கதையின் ஒன்லைன் இதுதான் என்றும் ரசிகர்கள் சிலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதன்படி அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவி. அவர்கள் இருவரும் ஒரு பணி நிமித்தமாக வெளிநாடு செல்கின்றனர். அப்போது திரிஷாவை வில்லன் குரூப் கடத்திவிடுகிறது. அவர்களிடமிருந்து திரிஷாவை எப்படி மீட்கிறார் என்பதுதான் அது என ஒருதரப்பினர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. லைன் சாதாரணமாக இருந்தாலும் கண்டிப்பாக மகிழ் திருமேனி திரைக்கதையில் மேஜிக் செய்துவிடுவார் என்ற கருத்தும் ஓடிக்கொண்டிருக்கிறதுஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்: படம் பக்கா ஆக்‌ஷன் காட்சிகளோடு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனியும் ஆக்‌ஷன் காட்சிகளை எடுப்பதில் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் திரைப்படத்தி க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிகூட அட்டகாசமாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் கார் ஒன்று ஒரு பக்கம் சாய்ந்தவாறு சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக இந்தப் புகைப்படம் அஜர்பைஜான் ஷெட்யூலில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் First சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இந்த மாத இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது விடாமுயர்ச்சி இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். வெற்றிகரமான வணிகப் படங்களை இயக்கி சாதனை படைத்த மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மேலும், இப்படம் ஆக்‌ஷன் ஜானரில் இருப்பதாகவும், இதில் அஜித்குமார் சிறந்து விளங்குவதாகவும் கூறப்படுகிறது.

அஜித்குமார் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை நடிகர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. நடிகர் தற்போது அஜர்பைஜானில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயர்ச்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, அஜீத் குமார் மார்க் ஆண்டனி இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏகே63 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கைகோர்க்க உள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் யென்னை அறிந்தால் நடிகரின் தீவிர ரசிகர், மேலும் அவர் தயாரிக்கும் படங்களில் நடிகருக்கு அடிக்கடி ஓட்ஸ் கொடுத்தார். படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் மறைக்கப்பட்ட போதிலும், தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பதை பிங்க்வில்லா பிரத்தியேகமாக அறிந்திருந்தது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT