Saturday, April 13, 2024

அஜித் மட்டும் இந்த மாதிரியான படத்தில் வில்லனாக நடித்தால் ! தமிழ் சினிமா உலகம் நிச்சயம் அதிரும் கூறியது யார் தெரியுமா

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சைரன்’: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ்...

கைவிட்ட சிம்பு கையில் எடுத்த பிரதீப் ரங்கநாதன் !சீக்ரெட் சொன்ன இயக்குநர்

நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும்...

மீண்டும் விஜய் உடன் மோதும் அஜித் ! இந்த முறை அடி யாருக்கு விழும் ?பீதியில் விஜய் ரசிகர்கள்

விஜய் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் பிரபு தனது வரவிருக்கும் விஜய்...

பவுன்சர்களை வைத்து மிரட்டும் கவின் ! பீதியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கவின். சரவணன் மீனாட்சி தொடர் மூலம்...
ADVERTISEMENT

த்ரிஷா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அஜித்குமாருடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்திடம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் படத்தின் பாடல்கள் மற்றும் அசல் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித் குமார் கடந்த சில நாட்களாக தனது பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவரது கடைசி வெளியீடான துனிவு வெளியான பிறகு, அஜித் தனது நடிப்பு வாழ்க்கையில் இருந்து நீண்ட இடைவெளி எடுக்க முடிவு செய்தார், பைக் சவாரி மீதான அவரது ஆர்வத்தைப் பின்பற்றினார். புகழ்பெற்ற நடிகர் தனது இடைவேளையின் போது ஐரோப்பாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பைக் சுற்றுப்பயணம் சென்றார்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை விரைவில் முடித்து இந்த வருட கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார்.

ADVERTISEMENT

அடுத்த லொக்கேஷன்: அஜித்தும் மும்முரமாக நடித்துவந்த சூழலில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்ததோடு புதிய லொக்கேஷன் தேடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அநேகமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங் சென்னையில் செட் போட்டு நடக்கும் இல்லையென்றால் வேறு மாநிலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன கதை? விடாமுயற்சி படத்துடைய கதையின் ஒன்லைன் இதுதான் என்றும் ரசிகர்கள் சிலர் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதன்படி அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவி. அவர்கள் இருவரும் ஒரு பணி நிமித்தமாக வெளிநாடு செல்கின்றனர். அப்போது திரிஷாவை வில்லன் குரூப் கடத்திவிடுகிறது. அவர்களிடமிருந்து திரிஷாவை எப்படி மீட்கிறார் என்பதுதான் அது என ஒருதரப்பினர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. லைன் சாதாரணமாக இருந்தாலும் கண்டிப்பாக மகிழ் திருமேனி திரைக்கதையில் மேஜிக் செய்துவிடுவார் என்ற கருத்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்: படம் பக்கா ஆக்‌ஷன் காட்சிகளோடு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனியும் ஆக்‌ஷன் காட்சிகளை எடுப்பதில் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் திரைப்படத்தி க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிகூட அட்டகாசமாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் கார் ஒன்று ஒரு பக்கம் சாய்ந்தவாறு சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக இந்தப் புகைப்படம் அஜர்பைஜான் ஷெட்யூலில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில் பார்த்திபன் அவர்கள் அஜித்தை பற்றி சூப்பரான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.நான் அஜித்துடன் ஒரு சில படங்களில் நடித்துள்ளேன் அது அருமையான நிகழ்வு அஜீத் ஹீரோவாக நடிப்பதை விட மிகச் சிறப்பாக வில்லன் கேரக்டரில் நடிக்க கூடியவர்.

அதனை உங்களுக்கு உணர்த்த வேண்டும் என்றால் வாலி திரைப்படத்தில் இதுவரை நடித்திராத அஜித் அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் சிறப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இவர் ஹீரோவாக நடிப்பதை விட வில்லன் கதாபாத்திரம் கொடுத்தால் மிக சிறப்பாக நடிப்பார் என எனக்கு தோன்றுகிறது.

ஹாலிவுட்டில் ஜோக்கர் கதாபாத்திரம் போல் அஜித் ஒரு படத்தில் நடித்தால் தமிழ் சினிமா அதிரும் என தெரிவித்தார் பார்த்திபன் மேலும் அஜித் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிக்க கூடியவர் என தெரிவித்தார் நானும் அஜித்தும் வில்லன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

த்ரிஷாவிற்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் முன்னால் உள்ளது, ஒன்றன் பின் ஒன்றாக மிகப்பெரிய திட்டங்களுடன். விடாமுயற்சி தவிர, பொன்னியின் செல்வன் நடிகை மெகாஸ்டார் சிரஞ்சீவியின் விஸ்வம்பர, மணிரத்னத்துடன் கமல்ஹாசனின் குண்டர் வாழ்க்கை மற்றும் மோகன்லாலின் மலையாளத் திரைப்படமான ராம் ஆகியவற்றிலும் நடிக்கிறார். நடிகை பவன் குமார் இயக்கிய த்வித்வா என்ற கன்னட படத்திலும், சதுரங்க வேட்டை என்ற தமிழ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக சதுரங்க வேட்டை 2 படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT