தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தனது படங்களின் வெளியீட்டிற்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதில்லை. இந்த நிலைப்பாடு குறித்து அவரது ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், அஜித் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாததற்கான காரணம் குறித்து அவருடன் நெருங்கி பழகியவரும், பத்திரிகையாளருமான வி.கே.சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “அஜித் ஆரம்பத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவார். அவரது பத்திரிகையாளர் சந்திப்பு எப்படி இருக்கும் என்றால், பெரிய ரவுண்ட் டேபிள் போட்டு அனைவரும் அமர்ந்து ஜாலியாக பேசும்படிதான் இருக்கும். அதில் சாப்பாடு, ட்ரிங்ஸ் என எல்லாமும் இருக்கும். நம்முடன் அவரும் கலந்துகொண்டு பேசுவார். ஏதேனும் கேள்வி பதில் செஷன் எடுக்க வேண்டுமென்றால் அவருடைய ஆஃபிஸுக்கு வர சொல்வார்.
ஒருகட்டத்தில் மீடியாக்கள் நிறைய பெருகிவிட்டன. சம்பந்தமே இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டன. அதனை அஜித் விரும்பவில்லை. அதனால்தான் அவர் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டார். அஜித்தின் மனநிலையில்தான் இப்போது மற்ற ஹீரோக்களும் இருக்கிறார்கள். என்ன ஒரு வித்தியாசம் அஜித் அதனை ஓபனாக சொல்லிவிட்டார். மற்றவர்கள் சொல்லவில்லை” என்று கூறினார்.
அஜித்தின் இந்த நிலைப்பாடு அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
