Wednesday, October 28, 2026

சிவகார்த்திகேயனை பதம் பார்த்த ஏ .ஆர். ரகுமான் ! ஏற்கனேவே இமான் மனைவி பிரச்சனை ! அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான வேற லெவல் சகோ லிரிக் வீடியோ ஏற்கனவே வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடலான அயல அயலா பாடல் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும், ஏ ஆர் ரகுமான் இது போன்ற பாடல்களை போட்டதில் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர், இந்த பாடலை எல்லாம் ரகுமான் தான் போட்டார் என்று 2கே கிட்சை வேணாம் ஏமாத்தலாம், 90ஸ் கிட்ட ஏமாத்தவே முடியாது. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிலர், சிவகார்த்திகேயன் ரசிகர்கள், சிம்புவுக்கு மட்டும் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது!, மறக்குமா நெஞ்சம் என அதிரடி ஹிட் பாடல்களை கொடுத்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இப்படி வெந்தும் வேகாத மாதிரி அரைவேக்காடு பாட்டை போட்டு இருக்கீங்களே என்று ஏ ஆர் ரகுமானை ரவுண்டு கட்டி வருகின்றனர்.

இன்னும் சிலர், அயலான் படத்திற்கு உண்மையில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பாளரா இல்லை அவரது மகன் இசையமைப்பாளரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் இசையமைத்த பல்வேறு பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், அயலான் படத்தின் அயல அயலா பாடல் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு சோதனையாக அமைந்துள்ளது.

இந்த பாடல் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருவதால், அயலான் படத்தின் மற்ற பாடல்கள் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT