Wednesday, October 28, 2026

தல டக்கர் டோய் ! விடாமுயற்சி படத்தில் 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் சமூக அக்கறை, அனிருத்தின் தரமான பாடல்கள்

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்த படத்தில் அஜித்துக்கு நிகராக அர்ஜுன், சஞ்சய் தத், ஆரவ் போன்றவர்கள் நடிக்கிறார்கள். மேலும் த்ரிஷா, ரெஜினா போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

முதலில் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் நம்பி கதையை கேட்காமல் நடித்த அஜித், தற்போது ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நடித்து வருகிறார். தன்னுடைய படங்களில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம் பெற வேண்டும், பாடல்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.

அந்த வகையில் விடாமுயற்சி படம் அதிரடி ஆக்சன் படமாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

படத்தில் பாடல்களும் தரமாக இருக்க வேண்டுமென அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே அஜித்திற்கு இவர் போட்ட மியூசிக் மற்றும் பாடல்கள் வரவேற்பு பெற்ற நிலையில், விடாமுயற்சி படத்திலும் அதை எதிர் பார்க்கின்றனர் ரசிகர்கள்.

விடாமுயற்சி படத்தில் மொத்தம் நான்கு அல்லது ஐந்து பாடல்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அனிருத் தளபதி 68 படத்திற்கு லோக்கலாக ஒரு பாடல் போட்டு இருக்கிறாராம். அதைவிட தர லோக்கலாக அஜித்தின் விடாமுயற்சிக்கு ஒரு பாடலையும் அனிருத் ரெடி செய்து உள்ளாராம்.

இதனால் விடாமுயற்சி படத்தை ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.இந்நிலையில் விடாமுயற்சி படத்திற்காக சன் தொலைக்காட்சி தற்போது படத்தில் ப்ரோமோஷன் வேலை தொடங்கும் விதமாக விடாமுயற்சி படத்திற்கு ஆடியோ லான்ச் விழாவை ஏற்பாடு செய்ய அஜித்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம் .அதற்கு அஜித் ஒகே சொல்லி உள்ளாராம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT