Wednesday, October 28, 2026

தளபதி 69-க்காக போட்டி போடும் இரண்டு பெரிய இயக்குனர்கள் ! விஜய் எடுத்த அதிரடி முடிவு ! ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய், தளபதி 69 படத்தை முடித்துவிட்டு இரண்டு வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு வாரிசு, லியோ என இரண்டு படங்களில் நடித்த விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

தளபதி 68 படத்தை முடித்த பிறகு, வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ், அட்லீ ஆகிய இயக்குனர்களில் ஒருவருடன் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜய் வேறு ஒரு திட்டத்தை வைத்திருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

அதாவது, தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், விஜய் தளபதி 68 படத்தை முடித்துவிட்டு இரண்டு வருடங்கள் சினிமாவில் பிரேக் எடுக்க போவதாக சொல்லப்படுகிறது. இந்த கேப்பில் தான் மக்கள் பணி மற்றும் அரசியல் பணியை செய்ய இருக்கிறாராம். எனவே 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்த பின்னர் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும் என கூறியுள்ளார் வலைப்பேச்சு அந்தணன்.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT