Wednesday, October 28, 2026

அஜித்துக்கு வெற்றிமாறன் சொன்ன கதை கரு இதுவா ? சமூக பிரச்சனையை கையில் எடுக்கும் அஜித்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் அஜித்குமார் தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை நடித்த பிறகு யார் யாருடன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் அஜித்குமாரின் கால் சீட்டுக்காக காத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் என்று கூறுகிறார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது வெற்றிமாறனுக்கு கால் சீட் கொடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அஜித் என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்தான கதைக்களம் இதுதான் என சில தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

பத்திரிக்கையாளராக அஜித்குமார்?

அந்த தகவல்களின்படி, நடிகர் அஜித்குமார் வெற்றிமாறன் படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறார். அரசாங்க வேலையில் இருந்து அரசாங்கத்தில் நடக்கக்கூடிய குறைகளை தெரிந்து கொண்டு அதனை தடுப்பதற்காக தன்னால் முயன்ற வேலைகளை செய்து வருகிறார். இதனால் கடுப்பான அரசியல்வாதிகள் அஜித்குமாரை பணி நீக்கம் செய்கிறார்கள்.

வேலையை இழந்த பிறகு பத்திரிக்கையாளராக அரசின் குறைகளை சரி செய்யக்கூடிய ஒரு நபராக மாறுகிறார் நடிகர் அஜித்குமார் என்று கூறப்படுகிறது.

இந்த கதை உண்மையான கதையா?

இந்த கதை, நிஜ உலகில் சமீப காலமாக திமுகவை எதிர்த்துக்கொண்டிருக்கும் பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் கதை என்று பலரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். மேலும் கீழ்வெண்மனியில் நடந்த படுகொலை சார்ந்த சில தொடர்பும் இந்த படத்தில் இடம்பெறும் என தெரிகிறது என விவரம் அறிந்த வட்டாரங்கள் தகவல்களை தெரிவிக்கின்றன.

அஜித்-வெற்றிமாறன் கூட்டணி உறுதியா?

இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எங்கிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரம், நடிகர் அஜித்குமார் ஒரு படத்தில் நடித்து முடித்து அந்த படத்தின் ரிசல்ட் தெரியும் வரை அடுத்த படத்தில் ஒப்பந்தமாக மாட்டார் என்று அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், வெற்றிமாறன் இணைந்து படம் பண்ணுவாரா..? நடிகர் அஜித்குமார் இதுதான் கதையாக இருக்குமா..? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஏற்கனவே தன்னுடைய கதையை படமாக்கினால் இயக்குனர் வெற்றிமாறனைத் தான் தேர்வு செய்வேன் அவருக்கு மட்டும்தான் என்னுடைய கதையை படமாக்குவதற்கு தகுதி இருக்கிறது என நம்புகிறேன் எனக் கூறியிருந்தார்.

மறுபக்கம் நடிகர் அஜித்குமாருக்கும் திமுகவுக்கும் இருக்கக்கூடிய வாய்க்கா தகராறு என்னவென்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி உறுதியா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், இந்த கூட்டணி உருவானால் தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்று நிகழ்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT