பான் இந்தியா மாஸ் ஹீரோ பிரபாஸ் நடிப்பில், கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சலார். இப்படத்தில் நடிகர் பிரித்விராஜும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. முதல் நாளில் 178 கோடி ரூபாய் வசூலித்து, இந்த ஆண்டின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் மாஸ் காட்டியது.
இரண்டாவது நாளில் 117 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆகமொத்தம் முதல் இரண்டு நாட்களில் 295 கோடி ரூபாய் வசூல் என்ற இமாலய சாதனையை படைத்தது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனால், பிரபாஸ் உட்பட சலார் படக்குழுவினர் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. படத்தின் விமர்சனங்கள் இணையதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, பிரபாஸின் நடிப்பு மற்றும் பிரசாந்த் நீலின் இயக்கம் பாராட்டப்பட்டு வருகின்றன.
இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், பிரபாஸின் மார்க்கெட் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
