தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியான ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் “விடாமுயற்சி”. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் ஒருநாளில் நடக்கும் கதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
துணிவு படத்தின் மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து தனக்கு எது செட்டாகும் என அஜித் நன்றாகவே புரிந்து வைத்து இருப்பதால் இந்த படத்தினை மகிழ் திருமேனி சொன்ன போது உடனே ஓகே செய்தாராம்.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் முடிந்தது. இப்படம் அடுத்த வருட பாதியில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
