தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியான ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் “விடாமுயற்சி”. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித்தின் “விடாமுயற்சி” படப்பிடிப்பில் குளிர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜர்பைஜானில் இப்போது மாலை நேரத்தில் கடுங்குளிர் ஏற்படுகிறதாம். இதனால் படப்பிடிப்பை இரவு நேரம் நடத்த முடியவில்லை. அதனால் படப்பிடிப்பை சூரியன் இருக்கும் நேரத்திலேயே முடிக்கும் படி மகிழ்திருமேனியை விரட்டி வருகிறாராம் அஜித்.
அஜித் அசைவ உணவுகளை தவிர்த்து வருகிறார். மதுவுக்கு நோ சொல்லிவிட்டாராம். அதனால் குளிர் தாங்க முடியாமல் படப்பிடிப்பை விரைவு படுத்தி வருகிறாராம். இதனால் மகிழ்திருமேனிக்கு கொஞ்சம் நெருக்கடி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அஜித்தின் கட்டுப்பாடுகள் காரணமாக படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், குளிர் பிரச்சனை படக்குழுவிற்கு சிறிது சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.
