தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வெளியான ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் “விடாமுயற்சி”. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது அஜர்பைஜானில் அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் நடந்துவருகிறது. இதில் அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும். ஒரு வேலையாக இரண்டு பேரும் அஜர்பைஜான் செல்லும்போது திரிஷாவை வில்லன் க்ரூப் கடத்திவிடுகிறது. அவரை அஜித் எப்படி மீட்டார் என்பதுதான் படத்தின் ஸ்டோரி லைன் என்கிறார்கள்.
ஆனால் இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி ஷூட்டிங்கிலிருந்து அஜித் ஒரு மாதம் பிரேக் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. அதாவது இதுவரை அஜித் பங்கேற்ற இரண்டு ஷெட்யூல்களிலும் அவருக்கான காட்சிகள் முக்கால்வாசி முடிந்துவிட்டதாம். பிறர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் மகிழ் திருமேனி எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். அதனால்தான் அவர் பிரேக் எடுப்பதாக தெரிகிறது.
மேலும் அஜர்பைஜானிலிருந்து லண்டன் செல்லும் அஜித் அங்கு தனது குடும்பத்தாருடன் புத்தாண்டு மற்றும் தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடவும் திட்டமிட்டிருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அஜித்தின் மகன் ஆத்விக் சென்றிருக்கிறார். அங்கு அவர் அர்ஜுனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ஆத்விக் படப்படிப்பு தளத்துக்கு வந்து படக்குழுவினருடன் ஜாலியாக பேசியதாகவும் படக்குழுவிலிருந்து தகவல்கள் கசிகின்றன.
இந்த தகவல்கள் அஜித் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
