நடிகர் விஷாலின் அமெரிக்காவில் அடையாளம் தெரியாத பெண்ணுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், விஷால் ஒரு பெண்ணுடன் ஒன்றாக நடந்து செல்வதைக் காண முடிகிறது. இந்த வீடியோவை ஒரு ரசிகர் எடுத்துள்ளார்.
விஷால் வீடியோ எடுக்கப்படுவதை கவனித்து, தனது ஹூடியால் முகத்தை மூடிக்கொண்டு அந்த பெண்ணின் கைகளை பிடித்து கொண்டு ஓடினார்.
இந்த வீடியோ வெளியானதை அடுத்து, விஷாலின் ரசிகர்கள் அந்த பெண் யார் என்று ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
விஷால் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது காதல் வதந்திகள் அவ்வப்போது இணையத்தில் பரவுவது வழக்கம்.
இந்த வீடியோ விஷாலின் திருமணம் குறித்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இந்த வீடியோ ஸ்கிரிப்ட் அல்லது உண்மை என்பது உறுதியாக தெரியவில்லை. சில நெட்டிசன்கள் இது விஷாலின் ஸ்கிரிப்ட் வீடியோ என்றும் படத்தின் ப்ரோமோஷனாக கூறுகின்றனர்.
இதற்கிடையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ சர்ச்சையை கிளப்பியது. AI தொழில்நுட்பம் மூலம் முகத்தை மாற்றி இவ்வாறு சில நெட்டிசன்கள் செய்வதால், பெரிய துன்பத்திற்க்கு ஆளாகி உள்ளனர் திரை பிரபலங்கள்.
அந்த வலையில், தற்போது நடிகர் விஷாலும் சிக்கிக்கொண்டாரா என்று தெரியவில்லை. இது குறித்து நடிகர் விஷாலை உண்மை என்னெவென்று விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷாலின் தரப்பில் இது குறித்து எந்த பதிலும் வெளியாகவில்லை.
டேய் விஷால் யாருடா அது…? 🙄 pic.twitter.com/Oeu1QVgOm7
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) December 26, 2023
