தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லியின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி ஏற்கனவே ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் பிகில் படம் உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில், அட்லியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லியின் முந்தைய படமான ஜவான் படத்தை தயாரிக்க முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், இறுதியில் ஷாருக்கானின் ரெட் சில்லி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அட்லியின் அடுத்த படத்தில் ஷாருக்கான் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருபக்கம், புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூனும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில், அட்லியின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தெரிகிறது. எனவே, இறுதியில் யார் இதில் நடிக்க போகிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
