நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் 33வது திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நடத்தப்பட்டது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் ஷூட் செய்யவேண்டி உள்ளதாகவும், அதை வரும் பிப்ரவரி மாதத்தில் ஷூட் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.
