Wednesday, October 28, 2026

தலைவரை தொடர்ந்து விரைவில் அஜித்துடன்… கூட்டணியை உறுதி செய்த சிவகார்த்திகேயன்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அஜித்குமார் இருவரும் ஒன்றாக பைக் டூர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், அஜித் பற்றி பேசியதாவது:

ADVERTISEMENT

“அஜித் சாரை ஒருமுறை நேரில் சந்தித்த போது அவர் என்னிடம், ‘சிவா நீங்க பைக் ரைடு எல்லாம் போவீங்களா?’ என கேட்டார். நான், ‘சார், பைக் ரைடு எங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் உள்ளூரில் ஓட்டுவது தான். உங்க அளவுக்கு எல்லாம் என்னால் வர முடியாது சார். நீங்க எல்லா நாட்டுக்கும் பயணம் செல்கிறீர்கள். ஆனால் அஜித் மாதிரி பைக் பயணம் மேற்கொள்ள வேண்டும் என ஆசை உள்ளது’ என்றேன்.

நான் நடுவுல கொஞ்ச நாள் என் நண்பரோட பைக் ஓட்டிட்டு இருந்தேன். வீட்டுல பைக் வாங்கி கொடுக்கல. சித்தப்பா பைக்கை கொஞ்ச நாள் வச்சிருந்தேன். ஆனால் என்னால் அதனை பரமாரிக்க முடியவில்லை. இப்ப பைக் வாங்கிட்டு அதை நல்லா ஓட்ட கத்துக்கணும். அஜித் வைத்திருக்கிற பைக் வாங்கி ஓட்ட கத்துகிட்டு ஒருமுறை அவர்களுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கு. அதை நடத்தி காட்டுறதை விட வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயம் எதுவும் இல்லை” என்றார்.

சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமார் பைக் பயணத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். பல நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளவர். சிவகார்த்திகேயனும் பைக் ஓட்டத்தில் ஆர்வம் உள்ளவர். இருவரும் இணைந்து பைக் டூர் செல்வது நிகழ்ந்தால் அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT