தமிழ்த் திரையுலகின் மாபெரும் சகாப்தமாக வாழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த், நடிகர் தனுஷின் குடும்பத்திற்கும் உதவியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார் கேப்டன் விஜயகாந்த். கேப்டன், புரட்சிக் கலைஞர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், இன்று நம்மோடு இல்லை. நடிகராக மட்டும் இல்லாமல் சிறந்த பண்பாளராகவும் வாழ்ந்து காட்டியவர் விஜயகாந்த்.
இந்நிலையில், நடிகர் தனுஷின் குடும்பமே விஜயகாந்துக்கு நன்றி கடன் பட்டுள்ளதாம். கஸ்தூரிராஜாவின் இரண்டு மகள்களும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கஸ்தூரிராஜாவின் முதல் மகள் விமலா கீதா பல் மருத்துவராகவும், இரண்டாவது மகள் கார்த்திகா தேவி மகப்பேறு மருத்துவராகவும் உள்ளனர். இவர்களில் கார்த்திகா தேவிக்கு டாக்டர் சீட் கிடைக்க கேப்டன் விஜயகாந்த் தான் உதவியுள்ளார்.
இதுபற்றி கஸ்தூரிராஜாவே ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தார். அதாவது, டாக்டர் கனவில் இருந்த கார்த்திகா, நுழைவுத் தேர்வு எழுதியும் கட் ஆஃப் மார்க்கில் குறைவாக மதிப்பெண் எடுத்திருந்தாராம். இதனால், இனி டாக்டராக முடியாது என்ற விரக்தியில் வீட்டில் அழுந்துகொண்டே இருந்துள்ளார் கார்த்திகா. அப்போது வேறொரு விஷயம் காரணமாக கஸ்தூரிராஜா வீட்டுக்குச் சென்ற விஜயகாந்த், கார்த்திகா அழுவதை பார்த்து என்ன பிரச்சினை என கேட்டுள்ளார். உடனே கார்த்திகாவின் மெடிக்கல் சீட் கனவு, கட் ஆஃப் மார்க் பற்றி கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். உடனே ராமச்சந்திரா மருத்துவமனையின் உடையாருக்கு போன் செய்து பேசினாராம் விஜயகாந்த்.
இதனயடுத்து உடனே கார்த்திகாவை நேரில் வரச்சொன்ன உடையார், அவருக்கு மருத்துவம் படிக்க சீட் கொடுத்துள்ளார். அதன்பின்னர் தான் கார்த்திகா நல்ல மருத்துவராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தகது. இப்படி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விஜயகாந்த் செய்த உதவியை மறக்கவே முடியாது என கஸ்தூரிராஜா.
விஜயகாந்த் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் அவரது இந்த உதவி குறித்து ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கேப்டன் விஜயகாந்தின் இந்த உதவியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
