நடிகர் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் பேரிழப்பிற்கு ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிறகு, அவரது நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தார். அவர் விஜயகாந்தின் மீது மிகுந்த அன்பும், மரியாதையுமாக இருந்தார்.
போண்டா மணி ஒரு நேர்காணலில் விஜயகாந்த் பற்றி பேசியிருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில்,
“விஜயகாந்த் என்றால் எனக்கு உயிர். இன்றைக்கு (அன்றைக்கு) உடல்நிலை சரியில்லாமல் இருப்பது ரொம்ப வருத்தமா இருக்குது. அவரது 25 ஆம் ஆண்டு கல்யாணத்துக்கு வீட்டுக்கு போனப்ப வெளியே அரசியல்வாதிகளில் இருந்து எல்லாரும் சேர்ந்த ஒரு கும்பல் நின்றது. நடிகன்னு நான் ஒருத்தன் காலையிலேயே அவர் வீட்டுல போய் நிக்குறேன். உள்ளே விஜயகாந்திடம் சென்று, வந்தவர்கள் பற்றி மேனேஜர் சொல்லியுள்ளார்.
உடனே, ‘முதல் ஆளாக போண்டா மணியை அனுப்பு’ என விஜயகாந்த் சொல்லியுள்ளார். நானும் சென்று அவரிடம், ‘அண்ணே என்னன்னே இவ்வளவு பேரு வெளியில இருக்காங்க. என்னை கூப்பிட்டு இருக்கீங்க?’ என கேட்டேன். அதற்கு, ‘நீதான்டா என் சகோதரன். நம்ம எல்லாரும் சினிமாவுல இருந்து வந்தவங்க. அவங்க எல்லாரும் இப்ப வந்தவங்க. நீதாண்டா எனக்கு எல்லாம் என சொன்னார்’. மேலும் ரூ.5 ஆயிரம் பணமும் கொடுத்தார். நினைச்சி பார்க்க முடியாத சம்பவம் அது. அவரைப் பற்றி பேசினாலே நான் கண்கலங்கி விடுவேன் என போண்டா மணி அந்த நேர்காணலில் கூறியிருப்பார்.
போண்டா மணி விஜயகாந்தின் மீது வைத்திருந்த அன்பும், மரியாதையுமான அர்ப்பணிப்பு இந்த வீடியோவில் நன்கு வெளிப்படுகிறது. விஜயகாந்த் மீதான அவரது அன்பை இந்த வீடியோ மூலம் நாம் உணர முடிகிறது.
போண்டா மணி மற்றும் விஜயகாந்த் இருவருமே தமிழ் சினிமாவின் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள். இருவரும் தமிழ் சினிமாவில் தங்கள் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர்கள். இருவரும் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்.
