Wednesday, October 28, 2026

மறைந்த விஜயகாந்துக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்! வைரலாகும் வீடியோ இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது.

அவரது உடல் இப்போது சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கிறது. தொண்டர்களும், ரசிகர்களும் உச்சக்கட்ட சோகத்தில் இருக்கின்றனர்.

ADVERTISEMENT

இனிக்கும் இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜயகாந்த் மொத்தம் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சாமானிய உருவம், மொழி, அழகு என அத்தனையிலும் அவர் எளிய மக்களை பிரதிபலித்ததால் ரசிகர்களிடம் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. இதன் காரணமாக அவர் ரஜினி, கமலுக்கு போட்டியாக வளர்ந்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

அரசியலில் கேப்டன்:

ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்ட அவர் கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களமிறங்கி எதிர்க்கட்சி தலைவராக மாறினார். பிறகு சில விஷயங்களால் அரசியலில் சறுக்கலை சந்தித்தார். அதேபோல் அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார்.

உயிரிழப்பு:

அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு முழுநேர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வில் இருந்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது நுரையீரல் அழற்சி ஏற்பட்டதன் காரணமாக நேற்று முன் தினம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணிக்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு தளபதி விஜய் இரவோடு இரவாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.

விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவருக்காக செந்தூரபாண்டி படத்தில் நடித்துக் கொடுத்தவர் விஜயகாந்த். அதேபோல், சூர்யாவுக்காக பெரியண்ணா படத்தில் நடித்திருந்தார் விஜயகாந்த். விஜயகாந்த் – அஜித் காம்போ மட்டும் இதுவரை இணைந்தது கிடையாது.

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரும் அஜித்?: தமிழில் உச்ச நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் நிகரான ரசிகர்கள் பட்டாளத்துடன செம்ம கெத்து காட்டியவர். அதேபோல், விஜயகாந்தின் பல படங்கள் சில்வர் ஜுப்ளி கொண்டாடியதும் உண்டு. அதிகமான படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்ததோடு, சண்டைக் காட்சிகளில் ட்ரெண்ட் செட்டராக இருந்தார்.

கால்களை சுழட்டி அடிக்கும் விஜயகாந்தின் ஃபைட் சீன்ஸ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக சினிமாவில் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த், சிகிச்சை பலனில்லாமல் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் முதலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

ஆனால், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துகொண்டே இருப்பதால், அவரது உடல் தீவுத் திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்களும் பிரபலங்களும் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேற்று இரவு அஞ்சலி செலுத்தினார். விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவருக்காக செந்தூரபாண்டி படத்தில் நடித்தவர் விஜயகாந்த்.

இந்நிலையில் நடிகர் அஜித் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வரவிருப்பதாக சொல்லப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றுள்ள அஜித், ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு அவசரமாக சென்னை திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்தை போல அஜித்தும் பல தடைகள், அவமானங்களை கடந்து சினிமாவில் சாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன் படப்பிடிப்புக்காக நாகர்கோவில் சென்றிருந்த ரஜினி, விஜயகாந்த் மறைவு செய்தியை அறிந்ததும் அவசரமாக சென்னை திரும்பினார். இன்று அவரும் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள நிலையில், அஜித்தும் அஞ்சலி செலுத்த வருவார் என எதிர்பார்த்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார் நடிகர் அஜித் !

படப்பிடிப்பிற்காக துபாயில் இருப்பதால் நேரில் வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார் !

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT