நடிகர் அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டு ஷெட்யூல்கள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது அஜித் துபாயில் ஓய்வெடுத்து வருகிறார். அவருடன் ஷாலினியும் துபாயில் இருக்கும் நிலையில், இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட க்யூட்டான போட்டோ வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டோவில், அஜித் வழக்கம் போல ஒயிட் ஷார்ட் அணிந்தபடி, சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் மாஸ் காட்ட, ஷாலினி ரொம்பவே இளமையாக தோற்றமளிக்கிறார். இருவரும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் ஷாலினியை இவ்ளோ இளமையாகவும் ஸ்டைலிஷாகவும் பார்த்தது கிடையாது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.
இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரோட் ஆக்ஷன் மூவியாக உருவாகும் விடாமுயற்சி திரைப்படம் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை சன் டிவியும் வாங்கியுள்ளதாம். அதேபோல் ஆடியோ ரைட்ஸ்ஸை சோனி நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

