திரை உலகில் கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு அசைக்க முடியாத நகைச்சுவை நாயகனாக உருவெடுத்த வைகை புயல் வடிவேலு, மறைந்த நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதல் குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்தக் கருத்தில் அவர், “சின்ன கவுண்டர் படத்தில் படம் முழுவதும் குடை பிடிக்கும் படி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு தனது ஊர்காரர் என்பதால் படம் முழுவதும் குடை பிடித்தபடி வரட்டும் என விஜயகாந்த இயக்குனரிடம் கூறியிருக்கிறார். ஆனால் இயக்குனரோ ஓரிரு காட்சிகளில் வடிவேலு வந்தால் போதும் என்று நினைத்திருக்கிறார். இதனால் வடிவேலு வருத்தமடைந்தார்.
ஒருமுறை கேப்டன் வீட்டில் துயரச்சம்பவம் நடந்த போது கார் பார்க்கிங்கில் சின்ன பிரச்சனை ஏற்பட்டு குழப்பம் நிலவியது. இந்த குழப்பத்திற்கு காரணமே வைகை புயல் வடிவேலு தான். மேலும் வைகை புயல் வடிவேலுவை பற்றி எந்த ஒரு சூழ்நிலையிலும் விஜயகாந்த் தவறாகவே பேசவில்லை.
இந்த சூழ்நிலையில் வடிவேலு தன்னைப் பற்றி அப்படி பேசியது தவறு என்று மன வருத்தத்தில் இருந்தார். மேலும் அரசியல் காரணமும் வடிவேலுவை கோபப்பட செய்து கோபத்தின் உச்சத்தில் சிந்திக்கும் திறனை குறைத்ததின் காரணத்தால் தான் கேப்டனை பற்றி தரக்குறைவான வார்த்தைகளில் பேசி இருக்கிறார்.
இந்தப் பிரச்சனையின் காரணமாகத்தான் வடிவேலு கேப்டனின் இறுதிச்சடங்கிற்கு வரவில்லை. மதுவுக்கு அடிமையாகாமல் இருந்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு வந்திருக்காது. இது என்னுடைய கருத்து” என்று தெரிவித்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதனின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
