தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஷால், தற்போது 45 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திரையுலகில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.
அவரது நடிப்பில் கடைசியாக வெளி வந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து அமெரிக்காவில் நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் ஊர் சுற்றிய வீடியோ அண்மையில் இணையதளத்தில் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ தொடர்பாக விஷால் விளக்கம் அளிக்கும்போது, அந்த பெண் அவரது உறவினர் என்றும், பிராங் செய்வதற்காக அந்த வீடியோவை அவர் வெளியிட்டார் என்றும் கூறினார்.
இந்நிலையில், 2010ல் திரு இயக்கத்தில் வெளி வந்த “தீராத விளையாட்டுப் பிள்ளை” படத்தில் விஷால் நடித்திருந்தார். இந்த படத்தில் மூன்று பெண்களுடன் டேட்டிங் செய்யும் ரோலில் நடித்திருந்தவர் மீண்டும் அந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன.
அந்தப் படத்தின் பிரமோஷனுக்குத் தான் விஷால் இந்த பிராங் வீடியோவை வெளியிட்டு இருப்பதாக தற்போது விஷயம் வேகமாக இணையங்களில் பரவி வருகிறது.
இந்தத் தகவல் உண்மையெனில், விஷால் ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். “தீராத விளையாட்டுப் பிள்ளை” படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாவது பாகம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதே சமயம், அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது துவங்கும், யார் யார் நடிப்பார்கள் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
