Wednesday, October 28, 2026

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய் மீதான கோபம்!இதனால் தான் செருப்படி விழுந்ததா

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு நள்ளிரவில் சென்றார். அப்போது அங்கு இருந்த மக்கள் பலரும் “வெளியே போ! வெளியே போ” என்று விஜய்யை பார்த்து கோஷம் எழுப்பினர்கள்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் மீது ஏன் இந்த அளவிற்கு கோபம்?

ADVERTISEMENT

இதற்கு சில காரணங்கள் உள்ளன.

விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, பலரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ஆனால், விஜய் ஒருமுறை கூட கேப்டனை நேரில் சென்று பார்க்கவில்லை.
விஜயகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து எதுவும் சொல்லவில்லை. ஆனால், சீமான், திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகளுக்கு போன் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்துள்ளார்.
இந்த இரண்டு காரணங்களும் விஜயகாந்த் ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது.

விஜய் ரசிகர்கள் கூறும்படி, அவர் பலமுறை கேப்டனை சந்திக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் உண்மைதானா என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிலர், “உடல் நிலை சரியில்லாதவரை அனுமதி கேட்டா பார்க்க செல்வார்கள். நல்லவேளை இறந்தபிறகு இறந்தவர் அனுமதி தரவில்லை அதனால் துக்கம் விசாரிக்க செல்லவில்லை என சொல்லாமல் விட்டார்களே” என்று கூறுகின்றனர்.
மற்றவர்கள், “விஜய் ஒரு பெரிய நடிகர். அவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது நேரில் சென்று பார்க்கவில்லை என்றால், அது அவரது தவறுதான்” என்று கூறுகின்றனர்.
இந்த சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT