Wednesday, October 28, 2026

அஜித் மட்டும் ஓகே சொல்லான இத நான் செஞ்சிருக்கவே முடியாது! மனம் உருகி பேசிய இயக்குனர்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், தற்போது துபாயில் தனது குடும்பத்துடன் ஜாலியாக ஒரு டிரிப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு போட்டில் அஜித் தனது குடும்பத்துடன் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவரை பார்த்ததும் ரசிகர்கள் “தல.. தல” என்று கூச்சலிட, அஜித் அந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து செல்வது போல அந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் விஜயகாந்த் மறைவிற்கு வராத அஜித், இப்போது தனது குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா செல்லும் இந்த காட்சிகள் ஒரு சில பேரை எரிச்சலுக்கு ஆளாக்குகிறது.

ADVERTISEMENT

விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அஜித், இந்த டிரிப்பை படப்பிடிப்பு இடைவேளையில் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படத்தை அனிருத் இசையமைக்கிறார்.

விடாமுயற்சி படத்திற்கு பிறகு, அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அஜித்தின் 65வது படத்தை பிரசாந்த் நீல்தான் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் அஜித்தை பற்றி சமீபத்தில் ஒரு இயக்குனர் பகிர்ந்த சீக்ரெட் இணையத்தில் வைரலாகி வருகிறது. Fox & crom Studios உரிமையாளர் ராஜேஷ்கண்ணா. இவர் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் கூட.

2019 ஆம் ஆண்டு மாயன் என்ற படத்தை எடுத்த ராஜேஷ் கண்ணா, இன்னும் ஒரு சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். அஜித்தின் ஒரு படத்தில் ராஜேஷ் பணியாற்றியிருக்கிறாராம். அப்போது அஜித் என்ன செய்ய போகிறாய் வருங்காலத்தில்? என்று கேட்டாராம்.

அதற்கு எதாவது செய்ய வேண்டும் அஜித். சாதிக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார் ராஜேஷ். உடனே அஜித் அதற்கு வெறும் பெயரை வைத்துக் கொண்டு ஒன்னும் பண்ண முடியாது. அதனால் ஒரு ஸ்டூடியோ கம்பெனி ஆரம்பித்து விடு என கையில் பணத்தையும் கொடுத்து உதவினாராம்.

அவர் கொடுத்த பணத்தில் உருவானதுதான் இந்த Fox & crom Studios கம்பெனி என்றும் அஜித் ஷாலினி ஆரம்பித்து வைத்ததுதான் என்றும் கூறினார்.

அஜித் தனது குடும்பத்துடன் துபாயில் ஜாலியாக சுற்றுலா செல்வது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. இருப்பினும், விஜயகாந்த் மறைவிற்கு வராத அஜித்தை சிலர் விமர்சித்து வருகின்றனர். அஜித் தனது விருப்பப்படி நடந்து கொள்வதுதான் முக்கியம் என்றும், அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT