கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளாததால், அஜித் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. துபாயில் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்த அஜித், விஜயகாந்தின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளாமல், அவருக்கு செல்போன் மூலம் இரங்கல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாக அஜித்தின் ரசிகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். அஜித் ஏன் கேப்டன் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், அஜித்தின் துபாய் பயணத்தின் உண்மையான காரணம் இன்று வெளியாகியுள்ளது. கேப்டன் இறப்பதற்கு மூன்று நாள்கள் முன்புதான் அஜித் விடாமுயற்சி படத்தின் சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டிருந்தார். டூப் வைத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவு கூறியும் அதை மீறி அவரே நடித்ததால் அவர் காலில் அடிபட்டிருக்கிறார். அதனால் துபாயில் ஒரு மூன்று நாட்கள் மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டாராம்.
இந்த காயத்தின் காரணமாகவே அஜித் துபாய்யில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அதனால்தான் அவர் கேப்டன் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அஜித்தின் இந்த விளக்கம் அவரது ரசிகர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் உண்மையில் கேப்டனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பியிருந்தார். ஆனால், காயத்தின் காரணமாக அது அவரால் முடியவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.அஜித்தின் ரசிகர்களுக்கு வேண்டுகோள்
அஜித்தின் ரசிகர்கள் இந்த விவகாரத்தை இனிமேல் கண்டு கொள்ளாமல், அவரது திரைப்படங்களை ஆதரிப்பது நல்லது.
