Wednesday, October 28, 2026

சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி குஷியில் பொதுமக்கள்.. காரணம் என்ன?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு சிலோ சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ரூ. 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ. 40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்துக்கு எப்போதுமே மவுசு அதிகம் தான்.

சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை அதன் விலை எப்போதுமே சீராக இருக்காது. வரத்து பொறுத்து விலை ஏற்ற இறக்கமாக இருக்கும். விளைச்சல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயரும். ஒரு சில காலக்கட்டத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் சின்ன வெங்காயத்தின் விளைசல் சீராகி விலை குறையும் என தெரிவித்து இருந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படும். அதை தவிர்த்து ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும்.

பருவ மழை காலங்களில் விளைச்சல் பாதிக்கப்படும். அப்படி விளைச்சல் பாதிக்கப்படும் போது விலை ரூ.100 கடந்து விற்பனை செய்யப்படும். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.150-ஐ கடந்தது. அதேபோல் டிசம்பர் மாதம் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100 என்ற அளவில் இருந்தது.

தற்போது வானிலை சற்று சீரடைந்துள்ள நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்தவகையில், தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி சந்தைகளில் ரூ 60 முதல் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் வரத்தும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த ஆண்டு தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வட மாநிலங்கள் டெல்லி ஆகிய இடங்களில் ஒரு கிலோ தக்களி ரூ. 300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. பின் விளைச்சல் சீரானதும் தக்காளி விரை சரசரவென சரிந்தது.

விலை வீழ்ச்சிக்கு காரணம்

சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்கள் உள்ளன:

வானிலை சீராடல்
விளைச்சல் அதிகரிப்பு
வடகிழக்கு பருவமழை முடிவு
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு
விளைச்சல் எதிர்பார்த்தபடி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, 2023-24 ஆம் ஆண்டில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும் என்று தெரிகிறது. இதனால், விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT